
சிறந்த கேப்டன்
சிறந்த கிரிக்கெட் கேப்டன்கள் வரிசையில் எப்போதும் இடம் பெறுபவர் இந்தியாவின் தோனி. இந்திய அணி, ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் என இரண்டு அணிகளையும் வெற்றிகரமாக வழி நடத்தியவர் தோனி. பல கோப்பைகளையும் பெற காரணமாக இருந்துள்ளார்.

அதிக முறை பிளே ஆஃப்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பிளே-ஆஃப் சென்ற அணி ஆகும். அதே போல மூன்று முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது அந்த அணி. அதனாலேயே சிறந்த ஐபிஎல் கேப்டன்களில் ஒருவராக கருதப்படுகிறார் தோனி.

தோனியின் திட்டங்கள்
தோனி விக்கெட் வீழ்த்த களத்தில் அந்த நேரத்தில் திட்டம் தீட்டி அதில் வெற்றி பெறுவார் என பலரும் கூறி இருக்கிறார்கள். எதிரணி பேட்ஸ்மேன் என்ன செய்வார் என்பதை ஊகித்து பீல்டிங் நிறுத்துவதில் தோனி சிறப்பாக செயல்படுவார். இது குறித்து சிஎஸ்கே வீரர் சான்ட்னர் தன் அனுபவத்தை கூறினார்.

சிஎஸ்கே பேட்டி
தற்போது லாக்டவுன் காரணமாக 2020 ஐபிஎல் தொடர் நடக்காத நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு வீரர்களை பேட்டி எடுத்து பதிவிட்டு வருகிறது அந்த அணி. சமீபத்தில் மிட்செல் சான்ட்னரை பேட்டி எடுத்தனர்.

சான்ட்னர் என்ன சொன்னார்?
மிட்செல் சான்ட்னர் கூறுகையில், தோனி உள்ளுணர்வை கொண்டு லேசாக பீல்டிங் மாற்றுவார், பந்துவீச்சை மாற்றுவார் என்றார். மேலும், சில சமயம் என்ன செய்கிறீர்கள்? என தோன்றும். ஆனால், அது பல சமயம் பலன் அளிக்கும் என்றார் சான்ட்னர்.

என்ன செய்வார் தோனி?
"தோனி தன் முடிவுகளை பெரும்பாலும் உள்ளுணர்வை கொண்டு எடுப்பார். பீல்டிங்கில் லேசாக மாற்றம் செய்வார். பந்துவீச்சிலும் அது போல மாற்றம் செய்வர். குறிப்பாக நான் பந்து வீசும் போது செய்வார். நான் இங்குள்ள பல பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆடியதில்லை என்பதால் அப்படி செய்வார்" என்றார் சான்ட்னர்.

தோனி.. ஏன் இப்படி செய்றீங்க?
"இந்த வீரர்களுடன் அதிகமாக ஆட ஆட உங்களுக்கு அந்த எண்ணம் வரும். "தோனி ஏன் இப்படி செய்கிறீர்கள்?" என சில சமயம் நமக்கு தோன்றும். அது பல சமயங்களில் வேலை செய்யும்" என தோனியின் உள்ளுணர்வு எப்படி சந்தேகத்தை உண்டாக்கினாலும், பலனளிக்கும் என்பதை சுட்டிக் காட்டினார்.

வில்லியம்சனுடன் ஒப்பீடு
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கிட்டத்தட்ட தோனி போன்றே களத்தில் அமைதியாக இருக்கக் கூடியவர். தன் திட்டங்களை அமைதியாக செயல்படுத்தி வெற்றி காணக் கூடியவர். நியூசிலாந்து வீரரான மிட்செல் சான்ட்னர், இரண்டு கேப்டன்கள் இடையே ஆன ஒற்றுமைகளை கூறினார்.

இருவரும் அமைதி
"இருவருமே களத்தில் அமைதியாகவும், பதற்றம் இல்லாமலும் இருப்பார்கள். களத்தில் ஒரே மாதிரி தான் நடந்து கொள்வார்கள். கேன் வில்லியம்சன் களத்தில் சூடாக மாட்டார். தன் அமைதியாக திட்டங்களை செயல்படுத்துவார்" என தோனி - கேன் வில்லியம்சன் குறித்து கூறினார் மிட்செல் சான்ட்னர்.


Click it and Unblock the Notifications











