மீண்டும் ஸ்பின் பவுலரை எடுத்த சென்னை.. மிட்சல் சாண்டருக்கு மஞ்சள் சட்டை பார்சேல்!
பெங்களூர்: ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. சென்னை அணி இப்போதுதான் ஏலம் எடுக்க தொடங்கி இருக்கிறது என்று கூட சொல்லலாம்.
வரிசையா நிறைய வீரர்களை எடுத்து வருகிறது. நிறைய வீரர்கள் புதிய முகங்களாக இருக்கிறார்கள்.
ஒருவேளை இவர்கள் எதிர்கால சூப்பர் ஸ்டாராக இருப்பார்களோ என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள். தற்போது மிட்சல் சாண்டர் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

யார் மிட்சல் சாண்டர்
மிட்சல் சாண்டர் நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். டேனியல் விட்டோரி அந்த அணியில் இருந்து ஓய்வுபெற்ற போது அவருக்கு பதில் அணியில் சேர்ந்தார். இவர் இடது கை ஸ்பின் பவுலர்.

சென்னை அணி
தற்போது மிட்சல் சாண்டர் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 50 லட்சம் கொடுத்து மிட்சல் சாண்டர் ஏலம் எடுக்கப்பட்டார். இவரது குறைந்த பட்ச தொகையே 50 லட்சம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பின்
ஏற்கனவே அணியில் மூன்று ஸ்பின் பவுலிங் போடக்கூடிய ஆட்கள் இருக்கிறார்கள். இவர் சிறந்த ஆல்ரவுண்டர். ஏற்கனவே அணியில் ரெய்னா, ஜடேஜா, ஆகிய ஆல்ரவுண்டர் இருக்கிறார்கள். ஹர்பஜன் வேறு ஸ்பின் போடுவார்.

திட்டம்
சென்னை அணி எந்த மாதிரியான அணியை உருவாக்க முயற்சி செய்கிறது என்று ரசிகர்களுக்கு தெரியவில்லை. வரிசையாக புதிய வீரர்களை அணியில் எடுத்து வருகிறது. கடைசியில்தான் தெரியும் சென்னை எப்படிப்பட்ட அணியை உருவாக்கி இருக்கிறது என்று.


Click it and Unblock the Notifications