Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டெஸ்ட் ரேங்க்.. பும்ராவை முந்தி நம்பர் 1 இடத்தை பிடித்த ஸ்டார்க்.. கில்லுக்கு இணையாக பண்ட்

மும்பை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசையில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ராவை முந்தி முதல் முறையாக நம்பர் 1 பவுலராகப் புதிய சாதனை படைத்துள்ளார்.

வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க் 12 ரன் கொடுத்து 6 விக்கெட்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 39 ரன் கொடுத்து 4 விக்கெட்களும் வீழ்த்தி ஒட்டுமொத்தமாக 10 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். இதன் மூலம் 872 புள்ளிகளுடன் பும்ரா மற்றும் நியூசிலாந்தின் மேட் ஹென்றி ஆகியோரை முந்தி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். காயம் காரணமாகப் பும்ரா கடந்த 2025 நவம்பர் முதல் விளையாடாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mitchell Starc No 1 Test Bowler Rishabh Pant Joins Shubman Gill at 7th Spot in ICC Rankings

இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 4 வது இடத்திற்கும், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான் 10 வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மிரட்டிய இங்கிலாந்தின் ஆலி ராபின்சன் 11 வது இடத்திற்கும், ஜோஷ் டங் 17 வது இடத்திற்கும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ஜடேஜாவால் இந்திய அணிக்கு சிக்கல்.. ரிவ்யூ எடுப்பதில் உள்ள பிரச்சனை.. 3 வருடத்தில் 22 டிஆர்எஸ்-இல் 0

ஜடேஜாவால் இந்திய அணிக்கு சிக்கல்.. ரிவ்யூ எடுப்பதில் உள்ள பிரச்சனை.. 3 வருடத்தில் 22 டிஆர்எஸ்-இல் 0

டெஸ்ட் பேட்டிங் தரவரிசையைப் பொறுத்தவரை, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 6 இடங்கள் முன்னேறி, கேப்டன் சுப்மன் கில்லுக்கு இணையாக 7 வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அண்மையில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் பண்ட் அடித்த 66 ரன்கள் அவரது இந்த முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணமாகும். தற்போது இருவருமே தலா 711 புள்ளிகளுடன் உள்ளனர். இப்பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் முதலிடத்திலும், ஜோ ரூட் 2 வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் முறையே 3 மற்றும் 4 வது இடங்களிலும் நீடிக்கின்றனர்.

'வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வாலை சும்மா விடாதீங்க.. நல்லதில்லை'.. ஆவேசமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

Also Read

'வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வாலை சும்மா விடாதீங்க.. நல்லதில்லை'.. ஆவேசமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
Story first published: Wednesday, August 26, 2026, 15:37 [IST]
Other articles published on Aug 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+