Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் டெண்டுல்கரை நோக்கி விரலை காட்டி... மித்தாலி ராஜ் சூப்பர் வாழ்த்து

ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி இந்திய மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் சூப்பராக வாழ்த்தியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கருக்கு இன்று பிறந்த நாள். 47 வயதை எட்டியுள்ள சச்சினுக்கு உலகெங்கும் இருந்து வாழ்த்துகள் குவிந்து கொண்டுள்ளன.. பிசிசிஐ தொடங்கி ரசிகர்கள் வரை அனைவரும் சச்சினை வாழ்த்தி மகிழ்ந்து கொண்டுள்ளனர்.

சச்சின் டெண்டுல்கரின் சிறப்பான ஆட்டங்களை நினைவு கூர்ந்து பலரும் டிவீட் போடுகின்றனர். வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்திய மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் தனது ஸ்டைலில் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மித்தாலி ராஜின் வாழ்த்து

மித்தாலி ராஜின் வாழ்த்து

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கியமான ஸ்டார்களில் ஒருவர் மித்தாலி ராஜ். அவர் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கருடன் இருப்பது போன்ற புகைப்படத்தைப் போட்டுள்ளார். அதில் சச்சின் டெண்டுல்கர் தனது வழக்கமான உற்சாகப் புன்னகையுடன் காட்சி தருகிறார். அருகில் மித்தாலி ராஜ் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார்.

அருமையான ஜென்டில்மேன்

அருமையான ஜென்டில்மேன்

சச்சினை நோக்கி விரலைச் சுட்டிக் காட்டியபடி பேசுகிறார் அவர். இது ஒரு பழைய நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படம்தான். ஆனால் இப்போது அவர் பேசுவது போலவே நமக்குத் தோன்றியது. இந்த படத்தைப் போட்டு மித்தாலி ராஜ் கூறுகையில், ரொம்ப மகிழ்ச்சிகரமான பிறந்த நாள் வாழ்த்துகள் சச்சின். பலரையும் கிரிக்கெட் மீது ஆர்வம், லட்சியம் கொள்ள வைத்தவர் மட்டுமல்ல, அருமையான ஜென்டில்மேனும் கூட என்று மனதார புகழ்ந்துள்ளார் மித்தாலி ராஜ்.

நாமும் வாழ்த்துவோம்

நாமும் வாழ்த்துவோம்

ஜென்டில்மேன் என்று பெயர் எடுப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். அப்படிப்பட்ட நிலையில் மிகவும் பெருமிதமாக சச்சின் டெண்டுல்கரை கெளரவித்து மித்தாலி ராஜ் போட்டுள்ள இந்த வாழ்த்து உண்மையிலேயே சச்சினை பெருமைப்படுத்துவதாக அமைந்துள்ளது. நாமளும் சேர்ந்து சச்சினை வாழ்த்துவோம்.

சாதனை சச்சின்

சாதனை சச்சின்

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் படைக்காத சாதனையே இல்லை. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 200 போட்டிகள் ஆடி 15,291 ரன்களைக் குவித்துள்ளார். 463 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 18,426 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணிக்காக ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் ஆடி 10 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் 78 போட்டிகளில் ஆடி 2334 ரன்கள் எடுத்துள்ளார்.

Story first published: Friday, April 24, 2020, 11:59 [IST]
Other articles published on Apr 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+