Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் காரணம்.. புலம்பும் இங்கிலாந்து.. அணிக்குள்ளேயே ஏற்பட்ட குழப்பம்.. பின்னணியில் சிஎஸ்கே!

சென்னை: இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைய சிஎஸ்கேவும், ஐபிஎல் தொடரும் மறைமுக காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மிகவும் பரபரப்பாக சென்ற அகமதாபாத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா தூசி தட்டியுள்ளது. இந்திய அணியின் ஸ்பின் பவுலர்கள் நேற்று சிறப்பாக பந்து வீசினார்கள்.

10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை இந்திய அணி எளிதாக வீழ்த்தி உள்ளது. இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

எப்படி

எப்படி

3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைய சிஎஸ்கேவும், ஐபிஎல் தொடரும் மறைமுக காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி ஸ்பின் பிட்சில் நடந்தாலும் நேற்று இங்கிலாந்து அணி ஒரே ஒரு முழு நேர ஸ்பின் பவுலரை மட்டுமே பயன்படுத்தியது. லீச் மட்டுமே முழு நேர ஸ்பின் பவுலர்.

ரூட்

ரூட்

பகுதி நேர ஸ்பின் பவுலர் ஜோ ரூட் நேற்று சிறப்பாக பவுலிங் செய்து ஐந்து விக்கெட் எடுத்தார். இங்கிலாந்து அணியில் அனுபவ ஸ்பின் பவுலர் மொயின் அலி இல்லாமல் போனதே இதற்கு காரணம் என்கிறார்கள். இவர் டெஸ்ட் தொடரில் இருந்து பாதியில் வெளியேறிவிட்டார். டாம் பெஸ் ஓய்வில் இருப்பதால் அவரையும் களமிறக்க முடியவில்லை.

மோசம்

மோசம்

இதனால் இருக்கிற ஸ்பின் பவுலர்களை வைத்து களமிறங்க வேண்டிய கட்டாயத்திற்கு இங்கிலாந்து அணி தள்ளப்பட்டது. இங்கிலாந்து வீரர் மொயின் அலி ஐபிஎல் போட்டிக்காகவே தற்போது டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். இவர் கடந்த ஜனவரியில் இருந்து கொரோனா பயோ பபுளில் இருக்கிறார். இந்த டெஸ்ட் தொடரில் ஆடினால் அதன்பின் ஐபிஎல் பயோ பபுளில் இவர் நேரடியாக இணைய வேண்டி இருக்கும் .

கஷ்டம்

கஷ்டம்

இதனால் ஐபிஎல்லில் ஆடுவதை மனதில் வைத்து இங்கிலாந்து அணியில் இருந்து மொயின் அலி வெளியேறினார். இதை ரூட்டும் மறைமுகமாக விமர்சித்து இருந்தார். இன்னொரு பக்கம் நேற்று ஆலிவ் போப்பிற்கு பதிலாக சாம் கரன் ஆட வேண்டும். அவரும் ஐபிஎல்லை மனதில் வைத்து கடைசி டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆட உள்ளார். இதனால் இங்கிலாந்து அணி இரண்டு முக்கியமான வீரர்களை இழந்தது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

இல்லையென்றால் நேற்று மொயின் அலி ஆடி இருக்க வாய்ப்புள்ளது. அதிலும் மொயின் அலி, சாம் கரன் இரண்டு பேருமே சிஎஸ்கே வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர் பயோ பபுள் மற்றும் ரொட்டேஷன் பாலிசி காரணமாக இங்கிலாந்து அணி முழுமையான பிளேயிங் 11ஐ அறிவிக்க முடியாமல் கடுமையாக திணறி வருகிறது.

Story first published: Friday, February 26, 2021, 11:48 [IST]
Other articles published on Feb 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+