For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வேற அணியாக இருந்தால் இந்நேரம் தூக்கி இருப்பாங்க.. தோனி அப்படி செய்ய மாட்டாரு.. மோயின் அலி பாராட்டு

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேயிங் லெவனை மாற்றவே மாற்றாது. தோனி ஒரு வீரர் மீது நம்பிக்கை வைத்துவிட்டால் அந்த வீரர் எவ்வளவு சொதப்பினாலும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கிக் கொண்டுதான் இருப்பார்.

இந்த சீசனில் கூட மோயின் அலி, தீக்ஷனா ஆகியோர் சரியாக விளையாடுவதில்லை. இதனால் அவர்களை அணியை விட்டு நீக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தினர். தோனி அதையெல்லாம் கேட்கவே இல்லை.

Moeen ali reveals how csk is differentiate from other teams

இந்த நிலையில் சிஎஸ்கே குறித்து பேசிய மோயின் அலி, ஒவ்வொரு அணிக்கும் கேப்டன் தான் மிக முக்கியம். எங்கள் அணியின் பல வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. மாற்று வீரராக களம் இறங்கியவர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டார்கள். ஒவ்வொரு அணியிலும் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க கடும் போட்டி இருக்கும். இதனால் கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஒவ்வொரு வீரர்களும் நினைப்பார்கள்.

அப்போது பல தவறுகள் நிகழும். இந்தத் தருணத்தில் தான் ஒவ்வொரு கேப்டனும் தங்களது வீரர்களுடன் பேசி அவர்களுக்கு ஊக்கத்தை கொடுக்க வேண்டும். இதில் தான் சிஎஸ்கே சிறப்பாக செயல்படுகிறது. ஏதேனும் ஒரு வீரருக்கு சில போட்டிகள் மோசமாக அமையும். இதுவே மற்ற அணிகளாக இருந்தால் அந்த வீரரை உடனே தூக்கி இருப்பார்கள்.

இந்த சூழலில் நீங்கள் எங்களுக்கு தேவை இல்லை என்பது போல் பேசுவார்கள். ஆனால் சிஎஸ்கே அப்படியல்ல. இந்த விஷயத்தில் தோனியும், சிஎஸ்கேவும் வித்தியாசமாக பார்க்கும். அந்த வீரருக்கு உண்மையில் திறமை இருந்தால் அவர்கள் தொடர்ந்து வாய்ப்பு வழங்க நம்பிக்கையை கொடுப்பார்கள். ஆனால் மற்ற அணிகள் இப்படி எல்லாம் செய்ய மாட்டார்கள்.

நீங்கள் பிளேயிங் லெவனை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். ஒரு அணியாக தங்களுடைய அடிப்படை விஷயங்களை சரியாக செய்தால் அதற்கான முடிவுகள் நிச்சயமாக வரும். இந்த விஷயத்தை உங்களுக்கு அனுபவம் வந்தால் மட்டும் தான் தெரிய வரும். சிஎஸ்கே அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள்.

நாங்கள் எப்போதுமே கிரிக்கெட்டை சிம்பிளாக தான் விளையாடுவோம். ஒவ்வொரு வீரர்களும் நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டு டிவோன் கான்வேவை சொல்லலாம். அவர் டி20 போட்டிகளில் அதிகமாக விளையாடிய அனுபவம் இல்லை. ஆனால் அவருக்கு போதிய அனுபவமும் திறமையும் இருக்கிறது.

தற்போது அவர் ஒரு ரன் மிஷின் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சிஎஸ்கே நிர்வாகமும் எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்காது. நாம் சரியாக விளையாடவில்லை என்றால் கூட அவர்கள் அது பற்றி கவலை கொள்ள மாட்டார்கள். அணி நிர்வாகம் எப்போதும் வீரர்களுக்கு ஆதரவாக இருக்கும். கடந்த சீசனில் எங்கள் அணிக்கும் சில பிரச்சனைகள் இருந்தது.

ஆனால் அது நிர்வாகத்தால் ஏற்பட்டது கிடையாது. எனினும் அது எங்களை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. நான் முதலாவது ஆண்டில் எப்படி விளையாடினேனோ, அதேபோல் தான் தற்போதும் உணர்கிறேன். இதனால் தான் சிஎஸ்கே மற்ற அணிகளை விட சிறப்பாக செயல்படுகிறார்கள் என மோயின் அலி கூறியுள்ளார்.

Story first published: Tuesday, May 23, 2023, 17:30 [IST]
Other articles published on May 23, 2023
English summary
Moeen ali reveals how csk is differentiate from other teams வேற அணியாக இருந்தால் இந்நேரம் தூக்கி இருப்பாங்க.. தோனி அப்படி செய்ய மாட்டாரு.. மோயின் அலி பாராட்டு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+