Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் விக்கெட் எடுப்பது அசால்ட்.. 2 சூத்திரம் மட்டும் போதும்.. ஹிட் மேனையே திணறடிக்கும் முகமது அமீர்

உலகின் அதிரடி மன்னனாக விளங்கும் இந்திய வீரர் ரோகித் சர்மாவை அசால்டாக வீழ்த்திவிடுவேன் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக இருந்தவர் முகமது அமீர். கடந்த 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியின் போது இந்திய அணி விக்கெட்களை அடுத்தடுத்து சரித்து பெரும் கவனத்தை ஈர்த்தார்.

இவர் தற்போது தனது பந்துவீச்சுக்கு கடினமான பேட்ஸ்மேன் மற்றும் சுலபமான பேட்ஸ்மேன்கள் குறித்து பேசியுள்ளார்.

திடீர் ஓய்வு

திடீர் ஓய்வு

முகமது அமீர் கடந்த 2020, டிசம்பர் மாதம் தீடீரென தனது ஓய்வை அறிவித்தார். 28 வயதே ஆகும் அவர் ஓய்வு அறிவித்தது அதிர்ச்சியை கிளப்பியது. தனக்கு, பாகிஸ்தான் அணியில் சரியான மரியாதை கிடைக்கவில்லை. மன ரீதியாக தனக்கு நிர்வாகம் கொடுத்த அழுத்தமே நான் ஓய்வு பெற காரணம் என பரபரப்பை கிளப்பினார்.

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

இந்நிலையில் இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார். அதில், பந்துவீச எனக்கு மிகவும் சுலபமாக இருந்தது ரோகித் சர்மா தான். அவரை 2 வழிகளில் சுலபமாக வீழ்த்த முடியும். இடதுகை பவுலர்கள் வீசும் இன் ஸ்விங்கிற்கு ரோகித் சர்மா மிக திணறுவார். அதே போல வேகமாக போடப்படும் அவுட் ஸ்விங்கிலும் சற்று திணறுவார் எனக்கூறியுள்ளார்.

கோலிக்கு பாராட்டு

கோலிக்கு பாராட்டு

இதே போல விராட் கோலி குறித்து முகமது அமீர் பேசியுள்ளார். அதில், அதிக பிரஷர் நிறைந்த சூழலில் பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தவகையில் பிரஷர் சூழலில் மிகவும் சிறப்பாக செயல்படும் விராட் கோலி குறித்து சொல்லவே தேவையில்லை. அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் அவர் தன்னை நிரூபித்துள்ளார். அதனால் தான் அவர் கிங் கோலியாக உள்ளார். அவருக்கு பந்துவீசுவது எனக்கு சற்று கடினமாக தான் இருக்கும்.

அமீரின் அனுபவம்

அமீரின் அனுபவம்

முகமது அமீர் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் 119 விக்கெட்களும், 61 ஒருநாள் போட்டிகளில் 81 விக்கெட்களும், 50 டி20 போட்டிகளில் 59 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அழுத்தம் காரணமாக ஓய்வு பெற்றார்.

Story first published: Thursday, May 20, 2021, 20:29 [IST]
Other articles published on May 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+