Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“உலகக்கோப்பை திட்டத்தில் சூர்யகுமார், இஷான் இல்லை??”.. ரோகித்தின் முடிவு.. சீனியர் வீரர் தந்த விளக்கம்!

மும்பை: 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் மிடில் ஆர்டரில் சூர்யகுமாரை நீக்கி ரோகித் சர்மா தற்போதே தனது முடிவை காட்டிவிட்டதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார்.

இந்திய அணி தற்போது இலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி கண்ட சூழலில் 3வது போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் இந்திய அணி வெற்றியடைந்த போதிலும் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதற்கு காரணம் அதிரடி வீரர்களாக பார்க்கப்படும் இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது தான்.

 2 அதிரடி வீரர்கள் நீக்கம்

2 அதிரடி வீரர்கள் நீக்கம்

50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தயாராக இன்னும் இந்தியாவுக்கு 8 மாதங்களே உள்ளன. இதன் இடையில் ஐபிஎல் தொடரும் 2 மாதங்கள் நடைபெறும். எனவே தற்போது இருந்தே அதற்கான அணியை உருவாக்கி வருகின்றனர். ஆனால் அதில் சூர்யகுமார் மற்றும் இஷான் கிஷான் போன்று அச்சமின்றி ஆடும் வீரர்கள் சேர்க்கப்படவில்லை.

 ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

வங்கதேச அணியுடனான தொடரில் இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்து ஆச்சரியம் தந்தார். மறுபுறம் சூர்யகுமார் யாதவ் இந்தியாவின் மிஸ்டர் 360 வீரராகவே மாறிவிட்டார். இவர்களை விட சுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் எந்தவகையில் சிறந்தவர்கள் எனக்கூறி ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

முகமது கைஃப் ஆதரவு

முகமது கைஃப் ஆதரவு

இந்நிலையில் ரோகித்திற்கு ஆதரவாக முகமது கைஃப் பேசியுள்ளார். அதில், இஷான் + சூர்யா + கே.எல்.ராகுல் + சுப்மன் கில் ஆகியோரை விடுவது மிகவும் கடினம் தான். ஆனால் கேப்டன் ரோகித் தெளிவாக கூறிவிட்டார். சுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் கடந்தாண்டு முதல் மிகச்சிறப்பாக விளையாடி ரன் சேர்த்துள்ளனர். கில் ஒரு நல்ல இன்னிங்ஸை ஓப்பனிங்கில் தந்தார், ஃபினிஷிங்கில் ராகுல் அசத்துகிறார். இலங்கையுடனான 2வது போட்டியில் அது தெரியவந்தது.

உடனடியாக வேண்டாம்

உடனடியாக வேண்டாம்

குறிப்பிட்ட வீரர்களை தேர்ந்தெடுத்துவிட்டால் அவர்களுக்கு நீண்ட வாய்ப்பை கொடுக்க வேண்டும். உடனே உடனே மாற்றக்கூடாது. அவர்கள் சொதப்பினால் மட்டுமே மாற்ற வேண்டும். உடனடியாக மாற்றினால் அணியின் பலமே கெட்டுவிடும். சூர்யகுமார் போன்றோர் உங்களை கவர்ந்திருக்கலாம். ஆனால் அனைத்து முடிவுகளையும் உடனே உடனே எடுத்துவிட முடியாது என கைஃப் கூறியுள்ளார்.

Story first published: Saturday, January 14, 2023, 17:25 [IST]
Other articles published on Jan 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+