Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷமியின் சவுத்தாம்ப்டன் "ராசி".. ஹாட்ரிக் கொடுத்த "லக்கி" மண்.. இன்றும் வேற லெவல் மிரட்டல்

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தில், ஷமியின் பவுலிங் பற்றி தான் அனைத்து எக்ஸ்பெர்ட்ஸும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் ஐந்தாவது நாளான இன்று, மழை பாதிப்புக்கு பிறகு, ஒரு மணி நேரம் கழித்து ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணியின் பவுலிங் மிகச் சிறப்பாக உள்ளது. குறிப்பாக ஷமியின் ஓவரில், நியூசிலாந்து வீரர்கள் கடுமையாக திணறுகின்றனர்.

 இந்திய அணி ஸ்கோர்

இந்திய அணி ஸ்கோர்

முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி தான் டாஸ் போடப்பட்டு இப்போட்டி தொடங்கப்பட்டது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

 இன் ஸ்விங், அவுட் ஸ்விங்

இன் ஸ்விங், அவுட் ஸ்விங்

இந்நிலையில், நேற்று (ஜூன் 21) நான்காவது நாள் ஆட்டம் முழுவதுமாக மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் ஒருமணி நேரம் தாமதமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், இதில் இந்திய பவுலர்கள் மிகச் சிறப்பாக வீசி வருகின்றனர். பேஸ், பவுன்ஸ், இன் ஸ்விங், அவுட் ஸ்விங் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

 மூன்று விக்கெட்ஸ்

மூன்று விக்கெட்ஸ்

குறிப்பாக, ஷமி வீசிய ஓவர் கிளாசிக் ரகம். அவர் வீசிய முதல் ஓவரில் 2 பந்துகள், வில்லியம்சனின் கையை பதம் பார்த்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பந்து எங்கு பிட்ச் ஆகிறது, எங்கு வெளியே செல்கிறது என்பதை கூட கெஸ் பண்ண முடியாமல் வீரர்கள் திணறினர். இந்த நிலையில் தான் மூன்று விக்கெட்டுகளை அறுவடை செய்திருக்கிறார் ஷமி.

 பேக் டூ பேக்

பேக் டூ பேக்

ஆம்!. முதல் விக்கெட்டாக வீழ்ந்தவர் ராஸ் டெய்லர் காலி. ஷமி வீசிய அட்டகாசமான பந்தில் லீடிங் எட்ஜ் ஆன பந்தை, ஷாட் கவரில் ஃபீல்ட் செய்து கொண்டிருந்த ஷுப்மன் கில், பந்தை மிக அபாரமாக டைவ் செய்து கேட்ச்சாக்கினார். உண்மையில், இந்த விக்கெட்டை பார்க்க அப்படி இருந்தது. சீனியர் வீரரான ராஸ் டெய்லரால் அந்த பந்தை ஒன்றுமே செய்ய முடியவில்லை. அந்த புயல் பந்தை அவர் கவர் டிரைவ் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், ஷுப்மனின் அபார கேட்ச்சால் அவர் 37 பந்துகளில் 11 ரன்களுடன் வெளியேற நேரிட்டது. பிறகு வாட்லிங் 1 ரன்னில் ஷமி ஓவரில் போல்டாக, கிராண்ட் ஹோம் 13 ரன்களில் எல்பி ஆகி வெளியேறினார்.

 ஹாட்ரிக் விக்கெட்ஸ்

ஹாட்ரிக் விக்கெட்ஸ்

இந்த சவுத்தாம்ப்டன் பிட்ச், உண்மையில் ஷமிக்கு மிகவும் ராசியானது என்று கூறலாம். ஆம், 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இதே சவுத்தாம்ப்டனில் நடந்த ஆட்டத்தில் தான் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஷமி ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினார். அதுவும் இதே நாளில் தான். அதாவது ஜூன் 22ம் தேதி தான் அவர் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி இருந்தார். நீ கலக்கு சித்தப்பு!

Story first published: Tuesday, June 22, 2021, 20:33 [IST]
Other articles published on Jun 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+