முதல் ஓவரிலேயே ஷாக்.. சிராஜுக்கு ராகுல் தந்த பலே ஐடியா.. பேட்டிங் பிட்ச்-ல் இலங்கை சுருண்டது எப்படி?
கொல்கத்தா: இலங்கை அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் பிட்ச்சானது பேட்டிங்கிற்கு சாதகமான இருந்த போதும் எதிரணியை சுருட்டியதற்கு கே.எல்.ராகுலின் ஐடியா தான் காரணம் என முகமது சிராஜ் கூறியுள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு அபார வெற்றியை பெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 39.4 ஓவர்களுக்குள் 215 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 43.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 219 ரன்களை அடித்து வெற்றி கண்டது.

2வது ஒருநாள் ஆட்டம்
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்கமாகும். இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணி 300 ரன்கள் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதற்கேற்றார் போல தான் இலங்கையும் டாப் ஆர்டரும் ஆடியது. ஆனால் அட்டகாசமான பவுலிங்கால் இலங்கையை சுருட்டியது இந்திய அணி.

முகமது சிராஜ் அட்டகாசம்
இந்தியாவுக்கு முதல் விக்கெட்டை எடுத்துக்கொடுத்து திருப்புமுணை தந்தவர் முகமது சிராஜ் தான். அவர் இந்த போட்டியில் 5.4 ஓவர்களை வீசி 3 முக்கியமான விக்கெட்களை கைப்பற்றினார். இதற்காக வெறும் 30 ரன்களை மட்டுமே அவர் விட்டுக்கொடுத்திருந்தார். லோயர் ஆர்டரில் 32 ரன்கள் அடித்து அச்சுறுத்தல் கொடுத்த வெல்லாலகேவும் சிராஜிடம் தான் விக்கெட்டை பறிகொடுத்தார்.

காரணம் கே.எல்.ராகுல்
இந்நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் கே.எல்.ராகுல் தான் என சிராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆட்டத்தின் முதல் ஓவர் வீசப்பட்ட உடனே கே.எல்.ராகுல் என்னிடம் நேராக வந்தார். பந்தில் சுத்தமாக ஸ்விங் எதுவும் இல்லை என்றும், பேட்டிற்கு மிகவும் சுலபமாக செல்வதாகவும் கூறினார். இதனால் ஒட்டுமொத்த திட்டத்தையும் மாற்றினோம்.

புதிய திட்டம் என்ன
பந்தில் வேகமும், ஸ்விங்கும் இல்லாததால் ஸ்டம்ப் லைன்களுக்கு மட்டுமே தொடர்ந்து வீசி அழுத்தத்தை உண்டாக்க வேண்டும், அப்படி ஒருபுறம் செய்துக்கொண்டே இருக்க, திடீரென லெந்த்-ஐ மாற்றினால் விக்கெட்கள் கிடைக்கும். நாங்கள் நினைத்தை போலவே நடந்தது. மற்ற பவுலர்களுக்கும் அது உதவியாக இருந்தது. குல்தீப் யாதவும் மிடில் ஓவர்களில் பெரிய அழுத்தத்தை உருவாக்கி விக்கெட் எடுத்துக்கொடுத்தார் என சிராஜ் கூறினார்.


Click it and Unblock the Notifications