Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலிய அடிச்சுக்க முடியாதுங்க... அவர்தான் நம்பர் ஒன்...முகமது யூசுப்

இஸ்லாமாபாத் : தற்போதைய சூழலில் இந்திய கேப்டன் விராட் கோலிதான் நம்பர் ஒன் சிறந்த விளையாட்டு வீரர் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள முகமது யூசுப், டிவிட்டர் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

மேலும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா இருவரும் தன்னுடைய உள்ளம் கவர்ந்த வீரர்கள் என்றும் முகமது யூசுப் தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் மூலம் ரசிகர்களுக்கு பதில்

டிவிட்டர் மூலம் ரசிகர்களுக்கு பதில்

முன்னாள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் முகமது யூசுப், பாகிஸ்தான் அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 288 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள அவர், டிவிட்டர் பக்கத்தின்மூலம் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

முகமது யூசுப் பதில்

முகமது யூசுப் பதில்

அவரிடம் இந்திய கேப்டன் விராட் கோலி குறித்து ஒருவார்த்தையில் கூறுமாறு ஒரு ரசிகர் டிவிட்டர் மூலம் கேட்டபொழுது, தற்போதைய சூழலில் விராட் கோலிதான் நம்பர் என்று முகமது யூசுப் தெரிவித்துள்ளார். மேலும் கோலி சிறந்த வீரர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒருவார்த்தையில் விராட் குறித்து கூறாமல் தொடர்ந்து பேசியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் குறித்து யூசுப்

சச்சின் டெண்டுல்கர் குறித்து யூசுப்

தொடர்ந்த ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த யூசுப், டெண்டுல்கர், லாரா, பாண்டிங், குமார சங்ககாரா மற்றும் ஜாக்குவஸ் காலிஸ் ஆகியோரில் சிறந்தவர்களை பட்டியலிட கேட்டபொழுது, நம்பர் ஒன், சச்சின் டெண்டுல்கர், நம்பர் 2 லாரா என்று கூறினார். தொடர்ந்து பாண்டிங், காலிஸ் மற்றும் சங்ககாராவை அவர் 3, 4 மற்றும் 5வது இடங்களில் பட்டியலிட்டார்.

முகமது யூசுப் பதில்

முகமது யூசுப் பதில்

மேலும் இவர்களில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா இருவரும் தனது மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்றும் யூசுப் தெரிவித்துள்ளார். இதேபோல சிறந்த ஒயிட் பால் கேப்டன் யார் என்ற கேள்விக்கும் பதிலளித்த யூசுப், அதற்கு நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Sunday, May 3, 2020, 17:32 [IST]
Other articles published on May 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+