Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மா உடன் ஜாக்கிரதையாக இருங்கள்..!! முன்னாள் வீரர் முகமது கையிப் திடீர் ட்வீட்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஜாக்கிரதையாக இருங்கள் என்று கெயிப் ட்வீட் போட்டுள்ளார்.

நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், மேற்கிந்திய தீவுகள் என தொடர்ந்து தொடர்களை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது.

மேலும் சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணி தொடர்ந்து 7 தொடர்களையும், தொடர்ந்து 7 போட்டிகளையும் வென்று அசத்தியுள்ளது.

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

சர்வதேச அளவில் டி20 போட்டியில் சொந்த மண்ணில் அதிக வெற்றியை பெற்ற கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். ரோகித் சர்மா 16 போட்டியிலும், இங்கிலாந்து கேப்டன் மார்கன் 15 போட்டியிலும், வில்லியம்சன் 15 போட்டியிலும் வென்றுள்ளனர். இதே போன்று சொந்த மண்ணில் அதிக டி20 போட்டியில் வென்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்தார்.

ஜாக்கிரதை

ஜாக்கிரதை

இந்த நிலையில் தான் ரோகித் சர்மாவை பாராட்டி கிண்டலடித்து முகமது கையிப் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் ரோகித் சர்மாவுடன் ஜாக்கிரதையாக இருங்கள். அவருடன் கை குலுக்கும் போது கூட கவனமாக இருங்கள். ஏனென்றால் ரோகித் சர்மா இப்போது தொடுவது எல்லாம் தங்கமாகி விடுகிறது என்று முகமது கையிப் கூறியுள்ளார்.

மாஸ்டர் ஸ்ட்ரோக்

மாஸ்டர் ஸ்ட்ரோக்

ஸ்ரேயாஸ் ஐயரை 3வது வீரராக களமிறக்குவது, அனைத்து வீரர்களுக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்குவது, பந்துவீச்சாளர்களுக்கு ஓவர் வழங்கி விக்கெட் எடுப்பது என அனைத்திலும் ரோகித் சர்மா எடுக்கும் முடிவிகள் மாஸ்டர் ஸ்ட்ரோக்காக இருப்பதாக முகமது கையிப் பாராட்டியுள்ளார்.

ரோகித் பதிலடி

ரோகித் பதிலடி

விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது பிசிசிஐ எடுத்த முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இனி இந்திய அணி என்ன செய்யப்போகிறது என்று பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலடி தரும் விதமாக ரோகித் சர்மா தொடர்ந்து சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார்.

Story first published: Sunday, February 27, 2022, 16:07 [IST]
Other articles published on Feb 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+