Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிங்கம் களமிறங்கிடுச்சி.. உடல் தகுதி தேர்வில் வென்ற முகமது ஷமி.. ஆஸி.க்கு வர அவசர அழைப்பு

பெங்களூரு : டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக விலகிய நிலையில், மாற்று வீரராக முகமது ஷமி அறிவிக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

பும்ரா இல்லாததால், ஆஸ்திரேலியாவில் பந்துவீசிய அனுபவம் கொண்டு வீரராக முகமது ஷமி விளங்குகிறார்.

பும்ராவை போல வேகம், பந்தை ஸ்விங் செய்வது என பல அட்டகாச திறமை இருந்தாலும், அவரை டி20 கிரிக்கெட்டில் கடந்த ஒரு ஆண்டாக பிசிசிஐ சேர்க்காமல் விட்டது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இதனையடுத்து, தென்னாப்பிரிக்க தொடரில் அவரை சேர்த்து பிசிசிஐ பரிசோதிக்க எண்ணியது. ஆனால், அவர் கொரோனவால் பாதிக்கப்பட்டு தொடரிலிருந்து வெளியேறினார். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் முகமது ஷமி பயிற்சி செய்து வந்தார்.

ஆஸி பயணம்

ஆஸி பயணம்

தற்போது அவருக்கு உடல் தகுதி சோதனை நடைபெற்றது. இதில் முகமது ஷமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஷமி, சிராஜ் மற்றும் பிஸ்னாய் என மூன்று பேரும் நாளை ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்ல உள்ளனர். இதில் முகமது ஷமி வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

இதில் முகமது ஷமி எப்படி செயல்படுகிறார் என்பதை பொருட்டு, அவர் பும்ராவுக்கு பதில் விளையாடுவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இல்லையேனில் முகமது சிராஜ்க்கு தான் வாய்ப்பு கிடைக்கும். தென்னாப்பிரிக்காவுக்குஎதிரான ஒருநாள் தொடரில் சிராஜ் சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தியதோடு, விக்கெட்டும் எடுத்தார்.

ஸ்டெயின் கருத்து

ஸ்டெயின் கருத்து

இதனால் தொடர் நாயகன் விருதும் முகமது சிராஜ்க்கு தரப்பட்டது. இந்த நிலையில், முகமது சிராஜே பும்ராவுக்கு பதில் சரியான தேர்வாக இருக்கும் என்று தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஸ்டேயின் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சிராஜ் டெஸ்ட் போட்டியில் நன்றாக விளையாடிய அனுபவத்தை பெற்றுள்ளார். தொடர்ந்து விளையாடி கொண்டு இருப்பதால் அவரை சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Story first published: Tuesday, October 11, 2022, 20:48 [IST]
Other articles published on Oct 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+