Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'முதுகு வலி' கிறிஸ் கெய்லுக்கு, 'முட்டி வலி' முகமது ஷமி பந்து வீசப்போவது உறுதி!

பெர்த்: முட்டி வலியில் இருந்து மீண்ட முகமது ஷமி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளார்.

இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இந்த உலக கோப்பை தொடரில், அதிக விக்கெட்டுகளை வீத்திய பவுலர்களில் முக்கிய இடத்தில் உள்ளார்.

Mohammed Shami fit agains WI clash

பயிற்சியின்போது முட்டியில் ஏற்பட்ட சிறு காயத்தால், எமிரேட்ஸ் அணியுடனான கடந்த போட்டியில் அவர் விளையாடவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முக்கியமான போட்டி வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அப்போட்டியில் ஷமி பங்கேற்பாரா என்ற கேள்விக்குறி நீடித்து வந்தது.

ஆனால், சந்தேகத்திற்கிடமின்றி, ஷமி இப்போட்டியில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நேற்றைய வலைப் பயிற்சியில் ஷமி ஈடுபடவில்லை. பிற வீரர்களின் பயிற்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.

முதுகு வலியால் அவதிப்படும் மே.இ.தீவுகள் அதிரடி ஆட்டக்காரர், கிறிஸ் கெய்லும், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரும் பயிற்சிகளில் ஈடுபடவில்லை.

Story first published: Wednesday, March 4, 2015, 11:43 [IST]
Other articles published on Mar 4, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+