Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்ப போகும் முகமது ஷமி.. முதல் முயற்சியில் பாஸ் மார்க்.. விவரம்

கொல்கத்தா: நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தற்போது நடைபெற்று வரும் ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை 2025-க்காக இங்கிலாந்து பயணிக்கும் வாய்ப்பை தவறவிட்டிருக்கலாம். ஆனால் விரைவில் மீண்டும் ஆட்டத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் உள்நாட்டு கிரிக்கெட் சீசனுக்காக வங்காள அணியின் உத்தேச வீரர்கள் பட்டியலில் ஷமி இடம்பெற்றுள்ளார்.

ஷமி தேர்வு செய்யப்பட்டால், இந்த முறை மண்டல அடிப்படையில் நடைபெறவுள்ள துலீப் கோப்பை 2025-ல் கிழக்கு மண்டல அணியில் இடம்பெறுவார். இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், ஷமி மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற வாய்ப்பு கிடைக்கலாம்.

Mohammed shami

தற்போது இந்திய டெஸ்ட் அணி ஜஸ்பிரீத் பும்ராவை பெரிதும் நம்பியுள்ள நிலையில், அவருக்கு இணையான திறமையை வழங்கக்கூடிய ஒரு வீரர் தேவைப்படுகிறார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன் ஷமி தேர்வு செய்யப்படாததற்கு காரணம், அவர் நீண்ட நேரம் பந்து வீச முடியாத நிலைதான். இதை தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் அணி அறிவிப்பின் போது விளக்கினார்.

"மருத்துவக் குழு எங்களிடம், ஷமி இந்தத் தொடருக்கு தகுதியற்றவர் என்று தெரிவித்துள்ளது. அவர் இந்தத் தொடருக்கு தயாராக முயற்சித்தார், ஆனால் கடந்த வாரம் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு சில எம்ஆர்ஐ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியும் என்று நினைக்கவில்லை.

தொடரின் சில பகுதிகளிலாவது அவர் கிடைப்பார் என்று நம்பினோம். ஆனால் தற்போது அவர் தயாராக இல்லை என்றால், காத்திருப்பது மிகவும் கடினம். இது துரதிர்ஷ்டவசமானது. அவரைப் போன்ற ஒரு பந்து வீச்சாளரை எப்போதும் தேர்வு செய்ய விரும்புவோம்," என்று அகர்கர் விளக்கினார்.

ஷமி மட்டுமல்லாமல், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஷாபாஸ் அகமது மற்றும் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரும் தேர்வு வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர, டெல்லி கேபிடல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் போரல், வரவிருக்கும் உள்நாட்டு சீசனில் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வநம்பிக்கையில் உள்ளார்.

துலீப் கோப்பை ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கவுள்ளது, மேலும் கிழக்கு மண்டலம் பெங்களூருவில் புதிதாக திறக்கப்பட்ட பிசிசிஐ சிறப்பு மைய மைதானத்தில் வடக்கு மண்டலத்திற்கு எதிராக சீசனின் முதல் கால் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. கிழக்கு மண்டலம் வெற்றி பெற்றால் அல்லது விளையாட்டு சமனில் முடிந்தாலும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றால், அதே மைதானத்தில் அரையிறுதிப் போட்டியில் விளையாடும். இறுதிப்போட்டியும் இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Story first published: Saturday, July 19, 2025, 23:59 [IST]
Other articles published on Jul 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+