Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலககோப்பையில் சாதனை படைத்த முகமது ஷமி.. நியூசிலாந்து ஆட்டம் அடங்கியது.. செம சவால் காத்திருக்கு

தர்மசாலா : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 21வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும் நியூசிலாந்தும் பல பரிட்சை நடத்தியது. தர்மசாலாவில் நடைபெற்ற இந்த போட்டியில் நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத இரண்டு அணிகளும் விளையாடினர்.

இந்த நிலையில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக முகமது சமியும், ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூரியகுமார் யாதவும் அணியில் சேர்க்கப்பட்டார்கள்.

Mohammed shami picks 5 wickets as NZ scores 273 runs

தொடக்க வீரராக களமிறங்கிய கான்வே டக் அவுட்டாகி வெளியேற வில் யங் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் நியூசிலாந்து அணி 19 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரச்சின் ரவிந்த்ரா 10 ரன்கள் எடுத்த போது ஜடேஜா ஒரு அழகான கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். இதனைப் பயன்படுத்திக் கொண்டு ரச்சின் ரவீந்திராகவும், டேரன் மிச்சல் ஜோடியும் இணைந்து நியூசிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 75 ரன்கள் வெளியேற கேப்டன் டாம் லாத்தம் 5 ரன்கள் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய டாரல் மிட்செல் எட்டு பவுண்டரி நான்கு சிக்ஸர் என 119 ரன்கள் சேர்த்தார். ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி பெரிய ஸ்கோரை அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி கட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அந்த அணியின் ரன்குவிப்பு வேகத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தனர்.

நியூசிலாந்து 300 ரன்களுக்கு மேல் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முகமது சமி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். கீழ் வரிசையில் மார்க் சாப்மேன் 6 ரன்கள், மிட்செல் ஷாட்னர் 1 ரன் என அடுத்தடுத்து வெளியேறினார். இதனால் நியூசிலாந்த அணி 273 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சிறப்பாக பந்து வீசிய முகமது சமி 5 விக்கெட்டுகளும், குல்தீப் இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார். உலக கோப்பை தொடரில் இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய வீரர் என்று பெருமை சமிக்கு கிடைத்தது.நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை டேரல் மிச்சல் பெற்றார்.

Story first published: Sunday, October 22, 2023, 18:14 [IST]
Other articles published on Oct 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+