For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிங்கம் வந்துருச்சி.. ஆஸி, சென்றடைந்த 3 முன்னணி ஃபாஸ்ட் பவுலர்கள்.. பும்ராவின் இடம் யாருக்கு?

பெர்த்: டி20 உலகக்கோப்பைகாக 3 முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ராவின் இடத்தை நிரப்ப ஆஸ்திரேலியாவுக்கு சென்றடைந்துள்ளனர்.

இன்னும் 3 நாட்களில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த வாரமே ஆஸ்திரேலியா சென்றடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

பும்ராவின் மாற்று

பும்ராவின் மாற்று

ஆனால் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரரும், ரிசர்வ் வீரர்களும் மட்டும் இந்திய அணியுடன் செல்லவில்லை. இதற்கான ஆலோசனை தீவிரமாக நடைபெற்று வந்தது. எனினும் தற்போது முகமது ஷமி தனது முழு உடற்தகுதியை நிரூபித்துவிட்டார். இதே போல முகமது சிராஜும் நல்ல ஃபார்முக்கு வந்துவிட்டார். துரதிஷ்டவசமாக தீபக் சஹார் மட்டும் காயம் காரணமாக டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.

ஆஸி, பயணம்

ஆஸி, பயணம்

இந்நிலையில் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இன்று ஆஸ்திரேலியாவுக்கு சென்றடைந்தனர். இவர்களுடன் தீபக் சஹாருக்கு மாற்றாக வந்துள்ள ஷர்துல் தாக்கூரும் பயணித்துள்ளார். மூவரும் நேரடியாக பெர்த்-ல் உள்ள இந்திய அணியின் முகாமில் இன்று இணைகின்றனர்.

கிட்டத்தட்ட உறுதி

கிட்டத்தட்ட உறுதி

இவர்களில் முகமது ஷமி தான் பும்ராவுக்கு மாற்றாக விளையாடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 2022ம் ஆண்டில் இதுவரை ஒரு சர்வதேச டி20 போட்டியில் கூட முகமது ஷமி விளையாடவில்லை. இவர் தயாராவதற்கு இந்திய அணியின் 2 பயிற்சிகள் போட்டிகள் மட்டுமே தற்போதைக்கு உள்ளது.

2 போட்டிகள் தான்

2 போட்டிகள் தான்

இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு அணியுடன் பயிற்சி போட்டியில் மோதுகிறது. இதனை தொடர்ந்து வரும் அக்டோபர் 14ம் தேதி ஆஸ்திரேலிய அணியுடனும், 16ம் தேதி நியூசிலாந்து அணியுடனும் பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது. இந்த இரண்டிலும் தான் முகமது ஷமியின் உண்மையான ஃபார்ம் தெரியவரும்.

Story first published: Thursday, October 13, 2022, 9:50 [IST]
Other articles published on Oct 13, 2022
English summary
Team India pacers Mohammed shami, Siraj Reaches Australia for t20 world cup 2022; who will Replace bumrah
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+