Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிங்க் பந்து சவால்.. அதெல்லாம் அவருக்கு ஒரு விஷயமே இல்லை.. ஷமியை பாராட்டிய சாஹா!

Recommended Video

Ind vs Ban 2nd test | Saha praises Shami | முகமது ஷமியை பாராட்டிய சாஹா!

கொல்கத்தா : முகமது ஷமி உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நாளை பகலிரவு போட்டியில் பயன்படுத்தப்பட உள்ள பிங்க் பந்துகள் மிகுந்த சவாலாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், முகமது ஷமி எந்த வண்ண பந்தையும், எந்த தளத்திலும் மிகவும் கடுமையாக எதிர்கொள்வார் என்று விக்கெட் கீப்பர் விரித்திமான் சாஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையில் இந்தூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இன்னிங்க்ஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த முகமது ஷமிக்கு, நாளை நடைபெறவுள்ள பிங்க் பந்துகள் போட்டி மிகுந்த சவாலாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் போன்ற நம்பிக்கை நட்சத்திரங்கள் இந்திய அணியில் உள்ள நிலையில், அவர்களுக்கு பிங்க் நிற பந்துகள் ஒரு பெரிய விஷயமில்லை என்று விரித்திமான் சாஹா தெரிவித்துள்ளார்.

 ஆவலுடன் ரசிகர்கள்

ஆவலுடன் ரசிகர்கள்

கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ள இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தை இந்திய அணி எதிர்கொள்கிறது. போட்டிக்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், இந்த போட்டியை இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

 காத்திருக்கும் இந்திய அணியினர்

காத்திருக்கும் இந்திய அணியினர்

இந்திய அணியினர் முதல்முறையாக எதிர்கொள்ளவுள்ள இந்த பகலிரவு போட்டியில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்நிலையில், இந்த பந்தை எதிர்கொள்வது அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆயினும் இதை போட்டியை விளையாட வீரர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

 விரித்திமான் சாஹா கருத்து

விரித்திமான் சாஹா கருத்து

இதனிடையே, இந்த போட்டிகளில் விளையாடுவது வேகப்பந்து வீச்சாளர் ஷமிக்கு சவாலான விஷயமாக இருக்காது என்று விக்கெட் கீப்பர் விரித்திமான் சாஹா தெரிவித்துள்ளார். ஷமி எந்த பந்தையும் எந்த தளத்திலும் மிகவும் கடுமையாக எதிர்கொள்வார் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

 போட்டி கடுமையாக இருக்காது

போட்டி கடுமையாக இருக்காது

முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, மற்றும் உமேஷ் யாதவ் போன்றோர் டீமில் நல்ல பார்மில் உள்ளதால் இந்த போட்டியை எதிர்கொள்வது கடுமையானதாக இருக்காது என்றும் விரித்திமான் சாஹா மேலும் கூறியுள்ளார்.

 பிங்க் பந்தை எதிர்கொள்ள கைகொடுக்கும்

பிங்க் பந்தை எதிர்கொள்ள கைகொடுக்கும்

ஷமி, சாஹா போன்றவர்களுக்கு உள்ளூர் போட்டிகளில் பிங்க் நிற பந்துகளில் விளையாடிய அனுபவம் உள்ளதால், அந்த அனுபவம் அவர்களுக்கு இந்த பகலிரவு போட்டியை விளையாட கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரேயொரு வித்தியாசம் அது குக்காபுரா பந்துகள்.

Story first published: Thursday, November 21, 2019, 15:51 [IST]
Other articles published on Nov 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+