For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2021: ஒரே ஓவரில் திரும்பி பார்க்க வைத்த சிராஜ்.. ஆடிப்போன ராஜஸ்தான்.. வேற லெவல் சம்பவம்

துபாய்: கடந்த சில மாதங்களாகவே முகமது சிராஜின் பந்து வீச்சு சீராக முன்னேறி வருகிறது. இன்று அவர் வீசிய 6ஆவது ஓவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

2021ஆம் ஆண்டிற்கா ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்தது. கொரோனா 2ஆம் அலையால் இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், சுமார் 3 மாத இடைவெளியில் இப்போது ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

லீக் சுற்று

லீக் சுற்று

ஐபிஎல் லீக் போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் எந்த அணியும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றாலும் கூட சென்னை மற்றும் டெல்லி அணி அடுத்த சுற்றுக்குச் செல்வது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அதேபோல பெங்களூரு அணி 6 வெற்றிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. அதேநேரம் பிளே ஆப்பில் 4ஆவது இடத்திற்குக் கொல்கத்தா, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பெங்களூரு vs ராஜஸ்தான்

பெங்களூரு vs ராஜஸ்தான்

இன்று துபாயில் நடைபெற்று வரும் 43ஆவது லீக் போட்டியில் பெங்களூரு அணி ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது பெங்களூரு அணியில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜார்ஜ் கார்டன் அறிமுக வீரராகக் களமிறங்குகிறார். அதேபோல கைல் ஜேமிசன் அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இன்று போட்டி தொடங்கியது முதலே ராஜஸ்தான் அணி அதிரடியாக ஆடி வந்தது. குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர்கள் எவின் லூயிஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெங்களூரு பவுலர்களை பொளந்து கட்டினர்.

அந்த ஒரு ஓவர்

அந்த ஒரு ஓவர்

இதனால் அனைத்து ஓவர்களிலும் சிக்சர்கள் பவுண்டரிகள் எனப் பறந்த வண்ணம் இருந்தது. பவுர் ப்ளே இறுதியில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்களை எடுத்திருந்து. இருப்பினும், அப்போதும் கூட பெங்களூரு அணியின் முகமது சிராஜ் சிறப்பான வகையில் பந்து வீசினார். 6ஆவது ஓவரை வீசிய முகமது சிராஜ் தொடர்ந்து சீரான வேகத்தில் பந்துவீசினார். அந்த ஓவரில் 4 பந்துகளை முகமது சிராஜ் 140 கிமீ வேகத்தில் வீசினார். இதனால் பவுர்ப்ளே-இல் கூட 6ஆவது சிராஜ் வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

வேற லெவல்

வேற லெவல்

முகமது சிராஜின் பந்து வீச்சு கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் சிறப்பாக இருந்து வருகிறது. குறிப்பாகக் கடந்த ஆண்டு ஆஸ்திரலேயிலா சுற்று பயணத்திற்கு பிறகு சிராஜின் பந்து வீச்சு வேற லெவலுக்கு சென்றுள்ளது. இப்போதெல்லாம் அவரால் 140+ வேகத்தில் சீராக வீச முடிகிறது. இது விக்கெட்களை எடுக்க மட்டுமின்றி ரன்களை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதனால் முன்பு ஆர்சிபி அணியில் வீக் லிங் (weak link)ஆக இருந்த சிராஜ் தற்போது அந்த அணியின் முக்கிய பந்துவீச்சாளராக மாறியுள்ளார்.

மிக சிறப்பு

மிக சிறப்பு

இன்றைய போட்டியில் மீண்டும் 19ஆவது ஓவரையும் சிராஜ் மிக சிறப்பாக வீசினார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் வெறும் 9 ரன்களை மட்டும் ராஜஸ்தான் அணியால் சேர்க்க முடிந்தது. இன்று மொத்தம் 3 ஓவர்களை வீசியிருந்த சிராஜ் , விக்கெட்களை வீழ்த்தவில்லை என்றாலும் கூட கட்டுக்கோப்பாகப் பந்துவீசி வெறும் 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ராஜஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைந்தாலும், மிடில் ஆர்டர் சொதப்பியதில் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

Story first published: Thursday, September 30, 2021, 1:47 [IST]
Other articles published on Sep 30, 2021
English summary
RR vs RCB IPL league match the latest update. mohammed siraj's bowling improvement latest.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+