ஆஸியின் கோட்டையை அசைத்த இந்தியா.. ஒரே பந்தில் விழுந்த பெரிய விக்கெட்.. முகமது சிராஜ் அபாரம்
லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச் சுற்றில் முதல் அரைமணி நேரத்தில் இந்திய அணி வீரர்கள் அபாரமாக விளையாடி வருகின்றனர். லண்டன் ஓவல் மைதானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்துள்ளது.
மேலும், புற்களும் ஆடுகளத்தில் இருப்பதால், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் களமிறங்கினர்.
முகமது ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் பந்தை சிறப்பாக வீசி, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் முதல் ரன்னை ஆஸ்திரேலிய எடுக்க 15 பந்துகள் ஆனது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

வார்னருக்கு ஸ்டம்பிலிருந்து வலது பக்கத்தில் முகமது ஷமியும், , கவாஜாவுக்கு ஸ்டம்பிலிருந்து சிராஜ் இடது பக்கம் வீசியும் இந்திய வீரர்கள் செக் வைத்தனர். இந்த நிலையில், முகமது சிராஜ் ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் பந்துவீச, அதனை உஸ்மான் கவாஜா தொட்டு, விக்கெட் கீப்பரிடம் சிக்கினார்.
உஸ்மான் கவாஜா கால்கள் சரியாக நகராமல் இருந்ததே, அவர் ஆட்டமிழந்ததற்கு காரணம் ஆகும். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவை 180 முதல் 220 ரன்களுக்குள் முதல் இன்னிங்சில் சுருட்டினால், இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருக்கும்.


Click it and Unblock the Notifications