வாய் கொழுப்பை காட்டிய சிராஜ்.. டெல்லி வீரர் சால்ட் உடன் மோதல்.. கடுப்பான வார்னர்.. களத்தில் பரபரப்பு
டெல்லி : ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி வீரர்கள், எதிரணி வீரர்களிடம் தேவையில்லாமல் மோதி வருவது தொடர்கதையாகி வருகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பேட் செய்தது. இதில் விராட் கோலி மெதுவாக விளையாடி அரைசதம் சேர்த்தார்.
எனினும், இறுதியில் லோம்ரர் 26 பந்தில் அரைசதம் அடிக்க, ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள், ஆர்சிபி பந்துவீச்சை பொளந்தனர்.

டேவிட் வார்னர் 14 பந்தில் 22 ரன்கள் சேர்க்க, பில் சால்ட் , ஆர்சிபி பந்துவீச்சை துவைத்தார். குறிப்பாக, நடப்பு சீசனில் முகமது சிராஜ் பவர்பிளேவில் சிறப்பாக பந்துவீச, இன்றைய ஆட்டத்தில், அவருடைய பந்தில் பவுண்டரிகளதக பறந்தது. இதனால் 4.2வது ஓவரில் எல்லாம் டெல்லி அணி 50 ரன்கள் எடுத்தது.
சிராஜ் வீசிய ஆட்டத்தின் 5வது ஓவரில் , பில் சால்ட் 2 சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்தார். இதனால் கடுப்பான சிராஜ், ஒரு ஷாட் பாலை போட்டு ஃபில் சால்டிடம் வம்பிழுத்தார். இருவரும், வாக்குவாதத்தில் ஈடுபட, இதனை எதிர்முனையில் நின்று பார்த்து கடுப்பான வார்னர், சிராஜிடம் தட்டி கேட்டார்.

அப்போது, சிராஜ் வார்னரிடம் ஏதோ கூற, பில் சால்ட்டிடம் வாயை மூடிக் கொண்டு பேட்டிங் செய் என்று கோபமாக பேசினார். இதனால் ஆடுகளத்தில் பரபரப்பு நிலவியது. பில் சால்ட் மீது எந்த தவறும் இல்லாத நிலையில், சிராஜ் தான் தேவையில்லாமல் சண்டை போட்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.


Click it and Unblock the Notifications