ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர் சி பி அணி தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி 12 புள்ளிகள் பெற்று இருக்கிறார்கள்.
எஞ்சிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் ஆர் சி பி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். மேலும் அவர்களுடைய ரன் ரேட்டும் அதிகமாக இருக்க வேண்டும்.

இந்த நிலையில் ஆர் சி பி அணி நாளை ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி கண்டிப்பாக வெற்றி பெற்று ஆக வேண்டும். சன்ரைசர்ஸ் அணியை பொறுத்தவரை அது அவர்களுக்கு சமிபிரதாய ஆட்டமாக தான் அமையும். இந்த நிலையில் ஆர் சி பி அணியின் முக்கிய வீரர் என்றால் அது முகமது சிராஜ் தான்.

சிராஜின் சொந்த ஊர் ஹைதராபாத் தான். இதனால் தன்னுடைய சொந்த ஊருக்கு வந்துள்ள rcb அணியினரை முஹம்மது சிராஜ் தான் கட்டி உள்ள புதிய வீட்டிற்கு வரவழைத்தார். இதை அடுத்து வீட்டில் பிரபல ஹைதராபாத் பிரியாணி விருந்தை போட்ட முகம்மது சிராஜ் தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சக அணி வீரர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

முகமது சிராஜ் லிவிங் ரூம்மில் அவர் வாங்கிய விருதுகள் வைக்கப்பட்டு இருந்தது. இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது முஹமது சிராஜ் தன் வீட்டு சுவற்றில் விராட் கோலியை கட்டி அணைத்து மகிழ்ச்சியை கொண்டாடும் புகைப்படத்தை பிரேம் போட்டு மாற்றி இருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் விராட் கோலி மீது உண்மையான அன்பு இருப்பதால்தான் சிராஜ் இதனை பிரேம் போட்டு மாற்றி இருக்கிறார் என மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர் .
