
ஜஸ்பிரித் பும்ரா விலகல்
தென்னாப்பிரிக்காவை வீழ்த்திவிட்டு பெரும் நம்பிக்கையுடன் இருக்கும் இந்த சூழலில் தான் அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காயம் காரணமாக விலகுவதாக தெரிவித்துள்ளனர்.

மாற்று வீரர் யார்?
இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்றாக யார் தேர்வாக உள்ளார் என்ற குழப்பம் எழுந்துள்ளது. இந்த போட்டியில் தீபக் சஹார், முகமது ஷமி, தீபக் சஹார், ஆவேஷ் கான் உள்ளிட்டோர் போட்டியில் இருந்த சூழலில் முகமது சிராஜ் அதில் வெற்றி கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பும்ராவுக்கு மாற்றாக சிராஜ் தான் களமிறங்கவுள்ளார்.

பிசிசிஐக்கு நெருக்கடி
இந்தியாவின் முன்னணி பவுலராக உள்ள முகமது சிராஜ் இதுவரை வெறும் 5 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அவரின் வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவை டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு நன்கு உதவும் என்பதால், அவரை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பெரியளவில் பிசிசிஐ சேர்க்காமல் இருந்து வருகிறது. ஆனால் தற்போது வேறு வழியின்றி அவரை களமிறக்குகிறது.

சிராஜ் ரெக்கார்ட்
கடைசியாக சிராஜ் கடந்த பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிரான டி20ல் விளையாடினார். இதுவரை மொத்தமாக விளையாடிய 5 போட்டிகளிலும் 5 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். எனினும் அவரின் எகானமி 10.45 என்ற விகிதத்தில் இருப்பதால், ரன்களை வாரி வழங்குவாரோ என்ற அச்சத்தை கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications