Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லியின் செல்ல பிள்ளை அணிக்கு வந்தார்... முகமது சிராஜை சிறைபிடித்த பெங்களூர்!

Recommended Video

லுங்கியால் சிஎஸ்கேவுக்கு சனி பெயர்ச்சி..!!

பெங்களூர்: ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. நேற்று பஞ்சாப் அணி எப்படி எல்லோரையும் எடுத்ததோ அப்படித்தான் இன்று பெங்களூர் அணி தீயாக வேலை செய்கிறது.

எல்லா வீரர்களையும் கேட்டுக் கொண்டு இருக்கிறது. முக்கியமாக இளம் வீரர்களை அணிக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறது.

ஏற்கனவே முருகன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அந்த அணியால் எடுக்கப்பட்டு இருக்கிறார். தற்போது முகமது சிராஜ் பெங்களூர் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

ஆட்டோ ஓட்டுநர் மகன்

ஆட்டோ ஓட்டுநர் மகன்

தெலுங்கானாவை சேர்ந்த இவர் 2015 இறுதியில் ஹைதராபாத் ரஞ்சி அணிக்காக விளையாடினார். மிகவும் சிறப்பாக பந்து வீச கூடிய இவர் இந்த வருட ரஞ்சி போட்டியில் மிக அதிகமான விக்கெட்டுகளை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு

வரலாறு

இவர் ஹைதராபாத்தில், சன் ரைசர்ஸ் அணிக்காக 2.6 கோடியில் ஏலம் எடுக்கப்பட்டார். வலது கை பந்து வீச்சாளரான இவர் நன்றாக பேட்டிங்கும் செய்ய கூடியவர். இந்திய அணியில் சென்ற வருடம் இணைந்தார்.

பெங்களூர்

பெங்களூர்

முகமது சிராஜ் பெங்களூர் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 2.60 கோடி கொடுத்து முகமது சிராஜ் ஏலம் எடுக்கப்பட்டார். இவருக்கு பெரிதாக வேறு எந்த அணியும் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றாலும் இவர் கோஹ்லியின் படையை சேர்ந்தவர் என்பதால் எடுக்கப்பட்டுள்ளார்.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள் பலர் அதிகமா இந்த அணியில் எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். முருகன் அஸ்வின் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் ஏற்கனவே எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே கோஹ்லி, ஏபி டி என்ற உலகின் தலை சிறந்த இரண்டு பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இவர்கள் போக மெக்குலம், சர்ப்ராஸ் கான் ஆகியோர் உள்ளனர்.

Story first published: Sunday, January 28, 2018, 11:41 [IST]
Other articles published on Jan 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+