Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக சாதனை படைத்து தங்கத்தையும் வென்ற மோனா அகர்வால்.. ஆசிய பாரா போட்டி துப்பாக்கி சுடுதலில் அசத்தல்

நகோயா: 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கிச் சுடுதல் களத்தில் இந்தியாவின் மோனா அகர்வால் புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்று இமாலய சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் எஸ்எச்1 பிரிவு இறுதிப்போட்டியில் மிகத் துல்லியமாகச் செயல்பட்ட அவர், 357.5 புள்ளிகள் குவித்து தங்கத்தை வென்றார்.

இதற்கு முன்பு ஸ்வீடன் நாட்டின் முன்னணி வீராங்கனை அன்னா பென்சன் 356 புள்ளிகள் எடுத்து உலக சாதனை படைத்திருந்தார். அந்த இமாலய சாதனையை உடைத்த மோனா அகர்வால், புதிய உலக சாதனையாளராக முதல் இடம் பிடித்தார். இந்த இறுதிப் போட்டியில் கடும் சவால் அளித்த சீனாவின் சுபிங் ஜாங் 353.7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், தென் கொரியாவின் மியோங் கிம் 344.4 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர். மற்றொரு இந்திய நட்சத்திர வீராங்கனையான அவனி லேகரா 333.2 புள்ளிகளுடன் 4-வது இடத்தைப் பிடித்து பதக்க வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்டார்.

Mona Agarwal Sets World Record to Win Gold in 50m Rifle 3 Positions at Asian Para Games 2026

இந்த இறுதிப்போட்டியின் தொடக்கத்தில் சீனாவின் சுபிங் ஜாங் ஆதிக்கம் செலுத்தி முன்னிலையில் இருந்தார். ஆரம்பத்தில் 203.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் பின்தங்கியிருந்த மோனா அகர்வால், போகப் போக விஸ்வரூபம் எடுத்தார். நின்றுகொண்டு சுடும் பிரிவில் 235.1 புள்ளிகளைத் தொட்டு சீன வீராங்கனையைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறினார். இறுதி வரை அழுத்தத்தை தாங்கி நின்று, மிகத் துல்லியமாகக் குறிபார்த்து சுட்டு தங்கத்தை உறுதி செய்தார்.

தமிழர் நவீன் உட்பட மூவருக்கு தங்கம்.. ஆசிய பாரா விளையாட்டில் 100 பதக்கங்களை கடந்து இந்தியா வரலாறு

தமிழர் நவீன் உட்பட மூவருக்கு தங்கம்.. ஆசிய பாரா விளையாட்டில் 100 பதக்கங்களை கடந்து இந்தியா வரலாறு

2026 ஆசிய பாரா விளையாட்டில் மோனா அகர்வாலுக்கு இது 2-வது தங்கமாகும். ஏற்கனவே 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ஆசிய சாதனையுடன் தங்கம் வென்றிருந்த இவர், தற்போது 50 மீட்டர் ரைபிள் பிரிவிலும் உலக சாதனையுடன் தங்கம் வென்று அசத்தி உள்ளார்.

Story first published: Friday, October 23, 2026, 10:37 [IST]
Other articles published on Oct 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+