For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆத்தாடி! இம்புட்டு கூட்டமா? இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிக்கு வரப்போகும் லட்சக்கணக்கான ரசிகர்கள்

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நாளை (நவம்பர் 21) அன்று நடைபெற உள்ள முதல் டி20 போட்டியில் விளையாட உள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நீண்ட சுற்றுப்பயணத்தில் பங்கேற்று ஆடவுள்ளது. இதில் மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கும்.

முதலில் நடைபெற உள்ள டி20 போட்டிகளுக்கு மிக அதிக அளவில் கூட்டம் வரவுள்ளது என கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணைய தளத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

கோலி ஆஸ்திரேலியா தொடரில் அமைதியா இருப்பாரா?.. அட போங்கப்பா! அதுக்கு வாய்ப்பே இல்லை!!கோலி ஆஸ்திரேலியா தொடரில் அமைதியா இருப்பாரா?.. அட போங்கப்பா! அதுக்கு வாய்ப்பே இல்லை!!

அதிக ரசிகர்கள் வருவார்கள்

அதிக ரசிகர்கள் வருவார்கள்

கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணைய தளத்தில் முதல் டி20 போட்டிக்கு சுமார் 30,000 ரசிகர்களும், வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள இரண்டாவது டி20 போட்டிக்கு 70,௦௦0 ரசிகர்களும், மூன்றாவது டி20 போட்டிக்கு 35,000 ரசிகர்களும் வரவுள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சம் டிக்கெட்கள் விற்றுள்ள நிலையில், மேலும், 35,000 டிக்கெட்கள் விற்கும் என கணித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. இது வரை ஆஸ்திரேலியாவில் ஒரு டி20 போட்டிக்கு வந்த அதிகபட்ச கூட்டம் 84,041. அந்த கூட்டமும் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிக்கு தான் வந்தது.

ஆஸ்திரேலியாவின் மோசமான நிலைமை

ஆஸ்திரேலியாவின் மோசமான நிலைமை

ஆஸ்திரேலிய அணி பந்து சேத விவகாரத்தில் சிக்கிய பின்னர் கிரிக்கெட் உலகில் பெரும் பின்விளைவுகளை சந்தித்தது. மூத்த வீரர்கள் ஸ்மித், வார்னர் தடை செய்யப்பட்ட பின், மற்ற வீரர்கள் ஆஸ்திரேலிய அணி குறித்து வெளியான எதிர்மறை செய்திகளாலும், சொந்த நாட்டு மக்களே தங்களை கைவிட்டு விட்டனர் என்ற எண்ணத்தாலும் மனம் துவண்டு போய் இருந்தனர். தொடர்ந்து போட்டிகளில் தோல்வியை தழுவி வந்தனர்.

ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு

ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு

இந்த நிலையில், அதிக மக்களை ஈர்த்துள்ளது இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி. இந்திய ரசிகர்கள் இந்தியா - பாகிஸ்தான் ஆடும் போட்டிகளுக்கு பின்னர் அதிக எதிர்பார்ப்புடன் இருப்பது இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிகளுக்கு தான். அதிக டிக்கெட்கள் விற்க இதுவும் ஒரு காரணம்.

முக்கிய வீரர்கள் இல்லை

முக்கிய வீரர்கள் இல்லை

அதே சமயம், இந்திய டி20 அணியில் தோனி இடம் பெறவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் தடை காலத்தில் இருப்பதால் இடம் பெறவில்லை. இப்படி முக்கிய வீரர்கள் இல்லாமலேயே கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா - ஆஸ்திரேலியா மோதலை பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர் என தெரிய வந்துள்ளது.

முதல் டி20 போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி விவரம் குறித்து இங்கே படிக்கலாம்.

Story first published: Tuesday, November 20, 2018, 17:16 [IST]
Other articles published on Nov 20, 2018
English summary
More Crowd will come to India - Australia T20 clash says Cricket Australia
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X