Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யார் இந்த மோசின் கான்? டி20 உலகக்கோப்பையில் சேர்க்க வலுக்கும் கோரிக்கை..அதுவும் பும்ராவுக்கு மாற்று

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் மோசின் கான் சேர்க்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

Recommended Video

Bumrah-க்கு பதிலாக Mohsin Khan-ஐ சேர்க்க வலுக்கும் கோரிக்கை

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி வரும் அக்டோபர் 6ம் தேதியன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகின்றனர்.

பும்ரா விலகல்

பும்ரா விலகல்

இந்த சூழலில் தான் ஜஸ்பிரித் பும்ரா டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தினால் பாதிக்கப்பட்ட அவர் முழு உடற்தகுதி இல்லை என்பதால் விலகுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பும்ராவுக்கு மாற்றாக ஷமி, முகமது சிராஜ், ஆவேஷ் கான், தீபக் சஹார் என பலரும் போட்டி போட்டு வருகின்றனர்.

யார் இந்த மோசின் கான்

யார் இந்த மோசின் கான்

இந்நிலையில் திடீரென மோசின் கான் என்ற வீரரின் பெயரை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 24 வயதாகும் மோசின் கான் உத்தரபிரதேசத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஆகும். உள்ளூர் போட்டிகளில் கலக்கி வந்த மோசின் கான் கடந்த ஐபிஎல் தொடரின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அசத்தல் ரெக்கார்ட்

அசத்தல் ரெக்கார்ட்

குஜராத் அணிக்காக அறிமுகமாக மோசின் கான், 9 போட்டிகளில் 14 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். அவரின் எகானமி ரேட்டும் 5.097 மட்டுமே ஆகும். நடப்பாண்டு ஐபிஎல்-ல் டெத் ஓவர்களில் மிகவும் குறைவான ரன்களை விட்டுக்கொடுத்த பவுலர் இவர் தான் ஆகும். இவரை ஒரு சிறப்பு காரணத்திற்காக டி20 உலகக்கோப்பையில் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரி வருகின்றனர்.

அப்படி என்ன காரணங்கள்

அப்படி என்ன காரணங்கள்

மோசின் கான் நன்கு உயரம் கொண்ட ஒரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஆவார். இந்திய களத்திலேயே அட்டகாசமாக ஸ்விங் செய்த இவர், ஆஸ்திரேலியா போன்ற களம் கிடைத்தால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். மிட்செல் ஸ்டார், ஜான்சன் போன்ற வீரர்கள் ஆஸ்திரேலியாவில் சோபித்தது இப்படி தான். எனவே மோசின் கானை சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரி வருகின்றனர்.

Story first published: Thursday, September 29, 2022, 21:19 [IST]
Other articles published on Sep 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+