சச்சின் அடிச்சா அடி விழும்.. ஆனா இன்சமாம் அடிச்சா இடி விழுமாம்.. சொல்வது சோயப் அக்தர்!
லாகூர்: சச்சின் டெண்டுல்கர் நல்ல பேட்ஸ்மேன்தான். ஆனால் அவரை விட பெஸ்ட் இன்சமாம் உல் ஹக்தான் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வேகப் பந்து வீசசாளர் சோயப் அக்தர்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்தான் இன்சமாம் உல் ஹக். மேலும் தொடக்க ஆட்டக்காரராகவும் கலக்கியவர். உலகின் எந்த வீரரையும் விட இன்சமாம் உல் ஹக் சிறந்தவர். சச்சினை விடவும் சிறந்தவர் என்று அக்தர் கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் அதி வேக பந்து வீச்சாளராக பலரையும் பயமுறுத்தியவர் அக்தர். குறிப்பாக சச்சினே கூட ஆரம்பத்தில் அக்தரிடம் ஜாக்கிரதையாகத்தான் இருந்தார். பின்னர் பிரித்து மேய்ந்து விட்டார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் சச்சினை விட பெஸ்ட் இன்சமாம் என்று கூறியுள்ளார் அக்தர்.

444 விக்கெட் வீழ்த்திய அசகாய சூரர்
சோயர் அக்தர் சர்வதேச கிரிக்கெட்டில் 444 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். தற்போது 41 வயதாகும் அவர் யாருடைய பேட்டிங் பெஸ்ட் என்பது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் தனது முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கை தூக்க வைத்துப் பேசியுள்ளார்.

எப்படிப் போட்டாலும் அடிப்பார்
நாம் எப்படி பந்து போட்டாலும் அவர் சிறப்பாக அடிப்பார். நான் பலமுறை சவால் விட்டு அவருக்கு பந்து வீசியுள்ளேன். எந்த பாலையும் அவர் மிஸ் செய்ததே இல்லை. கரெக்டாக அடிப்பார் என்றார் சோயப் அக்தர்.

34 டெஸ்ட்
ஹக்கும், அக்தரும் இணைந்து 34 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளனர். 16 வருட கால கிரிக்கெட் வாழ்க்கையில் இன்சமாம் உல் ஹக் 35 டெஸ்ட் சதங்களைப் போட்டுள்ளார். பாகிஸ்தானின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் அவரும் ஒருவர் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆப்கானிஸ்தான் கோச்
தற்போது ஹக், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கோச்சாக இருக்கிறார். அவரது பயிற்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக ஆடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications