Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிக 'டக்-அவுட்' ஆன வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன்.. பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிகம்

மும்பை: 2025-ம் ஆண்டு முடிவுக்கு வரப்போகிறது. கிரிக்கெட் உலகில் இந்த வருடம் எத்தனையோ சாதனைகள், சதங்கள், விக்கெட் வேட்டைகள் நடந்தேறியுள்ளன. வழக்கமாக நாம் அதிக ரன்கள் குவித்தவர்கள், அதிக சிக்ஸர் அடித்தவர்களைப் பற்றித்தான் பேசுவோம். ஆனால், களத்திற்கு வந்து ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியவர்களைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாமா?

இந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் சொதப்பி, அதிக முறை டக்-அவுட் ஆன வீரர்களின் பட்டியல் இதோ. இதில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது.

Most Ducks in International Cricket 2025 Saim Ayub Leads List of Top Players Out for Zero

முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர்

பாகிஸ்தான் அணியின் இளம் நட்சத்திரமாக வலம் வரும் சைம் அயூப் தான் இந்த வேண்டாத சாதனையில் முதலிடத்தில் உள்ளார். 2025-ம் ஆண்டில் மட்டும் இவர் சர்வதேச போட்டிகளில் மொத்தம் 8 முறை டக்-அவுட் ஆகியுள்ளார். இந்த வருடம் 37 இன்னிங்ஸ்களில் விளையாடி 817 ரன்கள் எடுத்திருந்தாலும், 8 முறை கணக்கைத் தொடங்காமலே நடையைக் கட்டியது அந்த அணிக்கு பெரிய தலைவலியாக அமைந்துள்ளது. அடுத்ததாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரோஸ்டன் சேஸ் 7 முறை டக்-அவுட் ஆகி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் அணிவகுப்பு

இந்த டக்-அவுட் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பெயர்கள் தான் அதிகம் அடிபடுகிறது. ரோஸ்டன் சேஸைத் தொடர்ந்து, ஜெய்டன் சீல்ஸ், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் மற்றும் ஜோமல் வாரிக்கன் ஆகியோர் தலா 5 முதல் 6 முறை டக்-அவுட் ஆகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளனர். பாகிஸ்தான் அணியின் ஒருநாள் போட்டி கேப்டனான ஷஹீன் அப்ரிடியும் பேட்டிங்கில் இந்த ஆண்டு 6 முறை முட்டை போட்டுள்ளார்.

2025-ல் அதிக முறை டக்-அவுட் ஆன சர்வதேச வீரர்கள் (முழு ஐசிசி உறுப்பினர் நாடுகள்):

சைம் அயூப் (பாகிஸ்தான்) - 8 முறை
ரோஸ்டன் சேஸ் (வெஸ்ட் இண்டீஸ்) - 7 முறை
ஷஹீன் அப்ரிடி (பாகிஸ்தான்) - 6 முறை
ஜெய்டன் சீல்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) - 6 முறை
ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் (வெஸ்ட் இண்டீஸ்) - 6 முறை
ஜோமல் வாரிக்கன் (வெஸ்ட் இண்டீஸ்) - 6 முறை
ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) - 5 முறை

இந்திய அணியின் நிலைமை என்ன?

இந்திய அணியைப் பொறுத்தவரை 2025-ல் அதிக முறை டக்-அவுட் ஆனவர் நமது 'யார்க்கர் கிங்' ஜஸ்பிரித் பும்ரா தான். அவர் மொத்தம் 5 முறை டக்-அவுட் ஆகியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக முகமது சிராஜும் 5 முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். இவர்கள் பந்துவீச்சாளர்கள் என்பதால் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

ஆனால், டி20 அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான சூர்யகுமார் யாதவ் இந்த வருடம் 3 முறை டக்-அவுட் ஆகியிருப்பது தான் ரசிகர்களுக்குச் சற்று வருத்தத்தை அளித்துள்ளது. அர்ஷ்தீப் சிங் 4 முறை டக்-அவுட் ஆகியுள்ளார்.

இந்திய வீரர்கள் பட்டியல் (2025):

ஜஸ்பிரித் பும்ரா - 5 முறை
முகமது சிராஜ் - 5 முறை
அர்ஷ்தீப் சிங் - 4 முறை
சூர்யகுமார் யாதவ் - 3 முறை

Story first published: Wednesday, December 31, 2025, 10:39 [IST]
Other articles published on Dec 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+