Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நேற்றைய ஆட்ட நாயகன்... ஐபிஎல்லுல பௌலரா அதிக முறை அவர்தான் விருது வாங்கியிருக்காரு!

சென்னை : நேற்றைய ஐபிஎல் 2021 தொடரின் 13வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.

Recommended Video

Delhi Capitals அணியில் இடம்பெற்ற இளம் வீரர்.. யார் இந்த Lalit Yadav

இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி அதிரடி வெற்றி பெற்றுள்ளது.

ஆட்ட நாயகனாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் அமித் மிஸ்ரா தேர்வாகியுள்ளார். அவர் நேற்றைய போட்டியில் மேலும் ஒரு சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

டெல்லி -மும்பை அணிகள் மோதல்

டெல்லி -மும்பை அணிகள் மோதல்

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய நிலையில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் 138 ரன்கள் இலக்கை டெல்லி வீரர்கள் சிறப்பாக முறியடித்தனர்.

அமித் மிஸ்ரா ஆட்ட நாயகன்

அமித் மிஸ்ரா ஆட்ட நாயகன்

நேற்றைய போட்டியில் ஆட்டநாயகனாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் பௌலர் அமித் மிஸ்ரா தேர்வாகியுள்ளார். அவர் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் மற்றும் கீரன் பொல்லார்ட் என மும்பை அணியின் சிறப்பான பேட்ஸ்மேன்களை அதிரடியாக பெவிலியனுக்கு அடுத்தடுத்து திருப்பி அனுப்பினார்.

தகர்த்த அமித் மிஸ்ரா

தகர்த்த அமித் மிஸ்ரா

இதையடுத்து ஆட்டத்தின் போக்கே மாறியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியால் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. மிஸ்ரா தனது பௌலிங் திறமையால் மும்பை இந்தியன்ஸ் அணியின் நேற்றைய போட்டியின் வெற்றிக் கனவை தகர்த்துள்ளார்.

12 முறை ஆட்ட நாயகன்

12 முறை ஆட்ட நாயகன்

இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது சிறப்பான பௌலிங்கால் நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வாகியுள்ள மிஸ்ரா ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 12 முறை ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மிஸ்ரா முன்னிலை

மிஸ்ரா முன்னிலை

ஐபிஎல்லில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ள பௌலர்களில் அவரே அதிகமான முறை தேர்வாகியுள்ளார். அடுத்ததாக இந்த பட்டியலில் ஹர்பஜன் சிங், ரஷீத் கான் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் 8 முறை பௌலிங்கிற்காக ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Story first published: Wednesday, April 21, 2021, 10:54 [IST]
Other articles published on Apr 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+