Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏலத்துல இப்படி கூட நடக்குமா?.. கைவிடப்பட்ட ஜாம்பவான்கள்.. லக் அடித்த இளம் வீரர்கள்!

பெங்களூர்: ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. இந்த ஐபிஎல் ஏலத்தில் நிறைய வித்தியாசமான சம்பவங்கள் நடந்து இருக்கிறது.

அஸ்வின் சென்னை அணியைவிட்டு போய்விட்டார். யுவராஜ் 2 கோடிக்கு மட்டுமே எடுக்கப்பட்டு இருக்கிறார்.

அதேபோல் கம்பீரும் 3 கோடியை கூட தொடவில்லை. இந்தநிலையில் பல முக்கிய வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

சிக்ஸ் மன்னன்

சிக்ஸ் மன்னன்

பெங்களூர் அணிக்காக ஆடிய கெய்ல், இந்த முறை எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை. முக்கியமாக மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வீரர்கள் யாருக்குமே பொதுவாக முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. இவர் கடைசியில் எடுக்கப்படுவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஹாசிம் அம்லா

ஹாசிம் அம்லா

அதேபோல் ஹாசிம் அம்லாவும் எடுக்கப்படவில்லை. இவருக்கு குறைந்தபட்ச தொகையே 1.50 கோடிதான். இதனால் கடைசியில் இவரது தொகை 75 லட்சமாக குறையும். அப்போது அவர் எடுக்கப்படலாம்.இவர் சென்ற ஐபிஎல் போட்டியில் இரண்டு செஞ்சுரி அடித்தார். சென்ற முறை கிங் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.

முரளி

முரளி

அதேபோல் முரளி விஜய் யாராலும் எடுக்கப்படவில்லை. சென்னை அணியும் இவரை எடுக்க வில்லை. இவருக்கு குறைந்தபட்ச தொகையே 2 கோடிதான். இதனால் கடைசியில் இவரது தொகை 1 கோடியாக குறையும். அப்போது அவர் எடுக்கப்படலாம். இவர் டெஸ்ட் வீரர் போல விளையாடுவதால் இப்படி புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

பாண்டே

பாண்டே

ஐபிஎல் ஏலத்தில் மனிஷ் பாண்டே ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 11 கோடிக்கு இவர் ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இந்த இளம் வீரர் இதற்கு முன் கொல்கத்தா அணிக்காக விளையாடியவர்.

கேதார் ஜாதவ்

சென்னையால் ஐபிஎல் ஏலத்தில் கேதார் ஜாதவ் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 7.8 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு முன்பு இவர் கொச்சி, டெல்லி, பெங்களூர் ஆகிய அணிக்காக விளையாடி இருக்கிறார். இவர் சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார்.

லோகேஷ் ராகுல்

லோகேஷ் ராகுல்

ஐபிஎல் ஏலத்தில் லோகேஷ் ராகுல் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 11 கோடிக்கு இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவரது குறைந்தபட்ச தொகை 2 கோடி ஆகும். இவருக்கு பலத்த போட்டி நிலவியது. அதிசயமாக அனைத்து அணிகளும் இவரை கேட்டனர்.

கருண்

கருண்

ஏலத்தில் கருண் நாயர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 5.60 கோடிக்கு இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவரது குறைந்தபட்ச தொகை 50 லட்சம் மட்டுமே ஆகும். இவருக்கும் கூட பலத்த போட்டி நிலவியது.

Story first published: Saturday, January 27, 2018, 14:51 [IST]
Other articles published on Jan 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+