ரசிகர் கேட்ட கேள்வி.. பாகிஸ்தானுக்கு போங்க என பதில் அளித்த தோனி.. இணையத்தில் பரவும் வீடியோ
துபாய் : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி ரசிகர் ஒருவரை பார்த்து பாகிஸ்தானுக்கு போங்க என்று கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
பொதுவாக நமது நாட்டில் ஏதேனும் ஒரு கருத்தை சொன்னால் அதை பிடிக்காதவர்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள் பாகிஸ்தானுக்கு போங்க என்று பதில் கூறுவார்கள். அவ்வளவு எண் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை ஒரு ரசிகரை பார்த்து இனிய வீரர்களை பின் தொடர மாட்டேன் என்று கூறியதற்கு ஏன் இங்கு இருக்கிறீர்கள்.

வெளிநாட்டுக்கு போகலாமே என்று கூறியிருந்தார். ஆனால் இந்த வீடியோவில் தோனி பாகிஸ்தானை நல்ல விதமாக தான் கூறியிருக்கிறார். தோனி தற்போது புத்தாண்டு விடுமுறையை கொண்டாட துபாயில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் துபாயில் தங்கி இருக்கிறார். தோனியின் நண்பர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ போட்டு இருக்கிறார்.
அதில் தோனி அவருடைய மனைவி சாக்சி, இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா மற்றும் அவருடைய மனைவி சீத்தல் ஆகியோர் துபாயில் தங்கி இருக்கிறார்கள்.இந்த நிலையில் இந்த வைரல் வீடியோ துபாயில் தான் நடந்திருக்க வேண்டும். அதில் உணவகம் ஒன்றில், தோனியும் அவரின் நண்பர்களும் உணவை சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்து ரசிகர் ஒருவரிடம் தோனி உணவு பற்றி பேசிக் கொண்டிருந்தார்.திடீரென்று தோனி அந்த வீடியோவில் நீங்கள் பாகிஸ்தானுக்கு போய் பாருங்கள். அங்கு உணவு எல்லாம் மிகவும் சுவையானதாக இருக்கும் என்று கூறுகிறார். ஆனால் அதற்கு அந்த ரசிகர் நீங்கள் நல்ல உணவு இருக்கிறது என்று சொன்னால் கூட நான் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டேன்.
எனக்கு உணவு என்பது மிகவும் பிடிக்கும்.அதற்காக நான் பாகிஸ்தானுக்கு எல்லாம் செல்ல மாட்டேன் என்று கூறுகிறார். இந்த பதிலை கேட்டு தோனி அமைதி ஆகி விடுகிறார். தோனியின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. தோனி பாகிஸ்தான் குறித்து நல்ல விதமாக கூறியுள்ளதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
Story first published: Friday, December 29, 2023, 22:08 [IST]
Other articles published on Dec 29, 2023


Click it and Unblock the Notifications