Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிங்கம் களமிறங்கிடுச்சி! வங்கதேசத்தில் கால் வைத்த டோணி.. உற்சாகத்தில் இந்திய வீரர்கள்!

டாக்கா: வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி கேப்டன் டோணி சக வீரர்களுடன் பயிற்சியை தொடங்கியுள்ளது அவர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி கடந்த புதன்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இதனிடையே ஒருநாள் போட்டி தொடர் நாளை, 18ம் தேதி, தொடங்குகிறது.

ஆரம்ப அதிரடி

ஆரம்ப அதிரடி

டெஸ்ட் போட்டிக்கு கோஹ்லி தலைமை தாங்கிய நிலையில், ஒருநாள் போட்டிக்கு டோணி கேப்டனாக செயல்பட உள்ளார். இதற்காக அவர் திங்கள்கிழமை டாக்கா வந்தடைந்தார். முன்னதாக, டெல்லியில் அவர் சிறப்பு பேட்டிங் பயிற்சிகளை மேற்கொண்டார். அப்போது தனது ஆரம்ப கால அதிரடி ஆட்டத்திற்கு தக்கபடி அவர் பேட்டிங் ஸ்டைலை மாற்றி பயிற்சி எடுத்தார்.

வந்தார் டோணி

வந்தார் டோணி

இந்நிலையில், இந்திய வீரர்களுடன் தற்போது டோணி பயிற்சி எடுத்து வருகிறார். டோணியின் வருகை, இந்திய வீரர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதை பார்க்க முடிவதாக டாக்காவிலுள்ள விளையாட்டு பிரிவு செய்தியாளர்கள் கூறுகின்றனர். வலைப் பயிற்சியின்போது, பெருமளவில் பந்து வீச்சாளர்களுடன் டோணி நேரத்தை செலவிடுகிறாராம். அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கிறாராம்.

வீரர்களுக்கு உற்சாகம்

வீரர்களுக்கு உற்சாகம்

"டோணி மீது சக வீரர்கள் மிகுந்த மரியாதையும், கவுரவமும் வைத்துள்ளனர். பல வீரர்கள், அவரது செயல்பாட்டு திறனை கண்டு வியப்பவர்களாக உள்ளனர். எனவே, டோணியின் வருகைக்கு பிறகு இந்திய வீரர்கள் பாடி லேங்குவேஜில் பெரும் மாற்றம் தெரிகிறது" என்கிறார் விளையாட்டு பிரிவு நிருபர் ஒருவர்.

ஓய்வுக்கு பிறகு..

ஓய்வுக்கு பிறகு..

மே 24ம் தேதி நடைபெற்ற, ஐபிஎல் பைனலுக்கு பிறகு டோணி எந்த போட்டியிலும் விளையாடாமல் முழு ஓய்வில் இருந்ததால், அவரும் உற்சாகத்தோடு காணப்படுகிறார். எல்லா வலைப் பயிற்சிகளின்போது செய்வதை போலவே டாக்காவிலும், கால்பந்து ஆடி டோணி ரிலாக்ஸ் செய்து கொள்கிறாராம். டோணி ஒருபக்கம் உற்சாகத்தை உருவாக்கியுள்ள நிலையில், அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் மாங்கு மாங்கென ஓடிக்கொண்டுள்ளாராம்.

மேஸ்திரியான சாஸ்திரி

மேஸ்திரியான சாஸ்திரி

ஒருநாள் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட்டுகள் என வர்ணிக்கப்படும் சுரேஷ் ரெய்னா, ராயுடு, ஜடேஜா, ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் மீதுதான் ரவி சாஸ்திரி முழு கவனம் செலுத்தி டிப்ஸ் கொடுத்து வருகிறார். இதற்காக, ஒவ்வொரு நெட்டுக்கும், ஓடிக்கொண்டுள்ளார் சாஸ்திரி.

பலே வீரர்கள்

பலே வீரர்கள்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில், இந்திய பேட்ஸ்மேன்கள் கோஹ்லி, தவான் மற்றும் டோணி ஆகியோர் முறையே, 4, 7 மற்றும் 9வதாக உள்ளர். பவுலர்களில் அஸ்வின் 12வது, உமேஷ் யாதவ் 16வது, புவனேஸ்வர் குமார் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முறையே, 17 மற்றும் 18வதாக உள்ளனர். இத்தகைய வீரர்களை வைத்து, வங்கதேசத்தை வதைக்க டோணி உறுதியாக உள்ளாராம்.

Story first published: Wednesday, June 17, 2015, 10:53 [IST]
Other articles published on Jun 17, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+