Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அகமதாபாத்துல எம்எஸ் தோனி கிரிக்கெட் அகாடமி துவக்கம்... இளம் திறமைகளுக்கு வழிகாட்டி!

அகமதாபாத் : எம்எஸ் தோனி கிரிக்கெட் அகாடமி அகமதாபாத்தில் துவக்கப்பட்டுள்ளது.

ஆர்க்கா ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்ரீ என்டர்பிரைசஸ் இணைந்து அகமதாபாத்தில் எம்எஸ் தோனி கிரிக்கெட் அகாடமியின் பிரமாண்ட துவக்கம் குறித்து நேற்றைய தினம் அறிவித்துள்ளன.

MS Dhoni Cricket Academy launched in Ahmedabad by Aarka Sports and Shri Enterprise

இதன்மூலம் குஜராத்தின் இளம் திறமைகள் அடையாளம் காணப்பட்டு சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்படும் என்று ஸ்ரீ எண்டர்பிரைசஸ் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் எம்எஸ் தோனி கிரிக்கெட் அகாடமி துவக்கம் குறித்து நேற்றைய தினம் அறிவிக்கப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் இளம் திறமைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிறப்பான வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஸ்ரீ எண்டர்பிரைசஸ் நிறுவன தலைவர் ஸ்ரீதர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் எம்எஸ் தோனி மற்றும் அன்டர் 19 உலக கோப்பை தொடரின் வீரர் மிஹிர் திவாகர் ஆகியோரின் அனுபவங்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இளம் வீரர்களுக்கு பயிற்சியாக அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டின் நவீன தொழில்நுட்பம், உயர்ரக கோச்சிங் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் வீரர்கள் போட்டிகளில் சிறப்பாக பங்கேற்க சிறப்பாக பயிற்சி அளிக்கப்படும் என்றும் ஸ்ரீ எண்டர்பிரைசசின் தலைவர் ஸ்ரீதர் ரெட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, January 26, 2021, 20:37 [IST]
Other articles published on Jan 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+