Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

80 கோடி தரனும், அப்பத்தான் வாழ்க்கை வரலாறு படத்தை ரிலீஸ் செய்யலாம்.. டோணியின் "மிரட்டல்"!

டெல்லி: தனது வாழக்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்றால் ரூ. 80 கோடி ராயல்டி தர வேண்டும் என்று கேப்டன் டோணி கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பேச்சு நடந்ததாகவும், அதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதில் ரூ 20 கோடி முதல் கட்டமாக டோணிக்குத் தரப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள தொகை திரைப்படத்தின் மூலம் கிடைக்கும் இதர லாபம் மற்றும் ராயல்டி மூலமாக டோணிக்கு அளிக்கப்படவுள்ளதாம்.

எம்.எஸ்.டோணி...

எம்.எஸ்.டோணி...

இருப்பினும் இவை உண்மையா என்பதை யாரும் உறுதிப்படுத்தவில்லை. சுஷாந்த் சிங் ராஜ்புத் டோணி வேடத்தில் நடிக்க, உருவாகியிருக்கும் படம்தான் எம்.எஸ். டோணி - அன்டோல்ட் ஸ்டோரி.

படக்குழு...

படக்குழு...

இப்படத்தை நீரஜ் பாண்டே இயக்கியுள்ளார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. கீரவாணி இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் கேமராவைக் கையாண்டுள்ளார்.

டோணியின் வாழ்க்கை வரலாறு...

டோணியின் வாழ்க்கை வரலாறு...

கேப்டன் டோணியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படம் இது. படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்து.

ராயல்டி தான் காரணமா?

ராயல்டி தான் காரணமா?

ஆனால் படம் வெளியாவது தாமதமாகி வருகிறது. அதற்கு டோணி கேட்ட ராயல்டிதான் காரணமா என்று தெரியவில்லை.

விளையாட்டு ஜாம்பவான்கள் கதை...

விளையாட்டு ஜாம்பவான்கள் கதை...

பாலிவுட்டில் ஏற்கனவே பான் சிங், மில்கா சிங், மேரி கோம் ஆகிய விளையாட்டு ஜாம்பவான்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகி வெளியாகியுள்ளது என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Tuesday, June 2, 2015, 14:30 [IST]
Other articles published on Jun 2, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+