ஐபிஎல் சூதாட்ட புகார்.. 100 கோடி ரூபாய் கேட்டு தோனி வழக்கு.. காவல்துறை அதிகாரிக்கு எதிர்ப்பு
சென்னை : இந்திய கிரிக்கெட்டில் ஐபிஎல் சூதாட்டப் புகார் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது.. கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை, ராஜஸ்தான் அணிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சென்னை அணியின் நிர்வாகிகளில் ஒருவராக இருந்த குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

100 கோடி ரூபாய்
இந்த சூதாட்டத்தில் தோனி ரெய்னா உள்ளிட்ட எந்த வீரர்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.இந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் மீது 100 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.

என்ன பிரச்சினை
ஐபிஎல் சூதாட்ட வழக்கை ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் விசாரித்து வந்த நிலையில் தோனி குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் அவருக்கு 2014ஆம் ஆண்டு தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து சம்பத்குமார் உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் புகார் அளித்ததாகவும், அதில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கடுமையாக விமர்சித்து சம்பத்குமார் கூறி இருப்பதே பிரச்சினைக்கு காரணம்.

மனுவில் புகார்
இந்த நிலையில் தோனி தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் , கடந்த 2014 ஆம் ஆண்டு சம்பத்குமாருக்கு எதிராக தான் தாக்கல் செய்த வழக்கின் தம்மை குறித்து தவறாக பேசக்கூடாது என நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டிருந்ததாக தோனி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதையும் மீறி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் சம்பத்குமார் புகார் அளித்துள்ளதாக தோனி தாக்கல் செய்த மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.

எப்போது விசாரணை
அதில் இந்த தீர்ப்பு நீதிமன்றத்தின் மீது சாதாரண மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் வகையில் இருப்பதாக சம்பத்குமார் தெரிவித்து இருப்பதாக தோனி தனது மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார் . இது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் தோனி தனது மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை அன்று விசாரிக்கப்படலாம் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications