Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இம்பேக்ட் ரூல் குறித்து தோனி மாஸ் பேச்சு.. எப்படி பயன்படுத்தனும் பாடம் எடுத்த தல.. CSK Playing xi

ஐபிஎல் 16வது சீசனில் முதல் மெகா ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த தோனி தாங்களும் முதலில் பந்து வீச தான் நினைத்தோம் என்று கூறினார்.

அகமதாபாத் ஆடுகளம் போட்டியின் 40 ஒவ்வொரு முழுவதும் ஒரே மாதிரி தான் இருக்கும் என நினைக்கிறேன். இதனால் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது எந்த நெருக்கடியும் இருக்காது. நேற்று அகமதாபாத்தில் மழை பெய்ததால் இன்று பனிப்பொழிவும் இருக்காது என நினைக்கிறேன்.

ms dhoni

ஐபிஎல் தொடரை மக்களுக்கு முன் விளையாடவே நாங்கள் ஆசைப்பட்டோம். மற்ற மைதானங்களை விட இரண்டு மடங்கு அதிக மக்கள் முன் ஐபிஎல் போட்டிகளை விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் இந்த தொடருக்காக சிறப்பான முறையில் பயிற்சி மேற்கொண்டு இருக்கிறோம்.

போட்டி தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நாங்கள் பயிற்சிகளை மேற்கொண்டு, பயிற்சிக்கு இடையே சில நாள் நாங்கள் ஓய்வெடுத்துக் கொண்டோம். இதேபோன்று இம்பாக்ட் பிளேயர் விதி வரமா சாபமா என கேட்கிறீர்கள்? என்னை பொறுத்த வரைக்கும் அது நிச்சயம் கேப்டனுக்கு சாதகமான விஷயமாகவே கருதுகிறேன்.

ஏனென்றால் நீங்கள் எந்த வீரரை எந்த நேரத்தில் பயன்படுத்த முடியும் என்று உங்களுக்கு தெரியும். ஆடுகளம் மாற்றம் ஏற்பட்டால் உடனே நாம் வேறு வீரரை பயன்படுத்தலாம். எனவே என்னை பொறுத்த வரைக்கும் இந்த விதி சாதகம்தான். இந்த விதி காரணமாக ஆல்ரவுண்டர் முக்கியத்துவம் குறைவது போல் தெரியும் என்று தோனி கூறியுள்ளார்.

இன்றைய ஆட்டத்தில் கான்வே, ருத்ராஜ் கெய்க்வாட்,பென் ஸ்டோக்ஸ்,மோயின் அலி, ஜடேஜா, ராயூடு,தோனி, மிச்செல் சாண்டனர், தீபக்சாகர், ராஜவர்தன் ஹங்கேர்கர் ஆகியோரை தோனி சேர்த்துள்ளார்.

Story first published: Friday, March 31, 2023, 19:33 [IST]
Other articles published on Mar 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+