Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

BREAKING: சிஎஸ்கேவின் புது கேப்டன் ஜடேஜா.. தோனியே அறிவிப்பு.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்சி பதவியை ஜடேஜாவிடம் ஒப்படைத்தார் தோனி.

Recommended Video

IPL 2022: Dhoni Steps Down as CSK Captain, Jadeja to lead | OneIndia Tamil

ஐபிஎல் 15வது சீசன் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இந்த சீசன் தான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என வல்லுநர்கள் கூறினர்.

தோனியின் ஃபார்ம்

தோனியின் ஃபார்ம்

41 வயதை எட்டும் தோனி கடந்த 2 சீசன்களாகவே பேட்டிங்கில் சிறப்பாக சோபிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். கடந்த சீசனில் 16 போட்டிகளில் வெறும் 114 ரன்களை மட்டுமே அடித்து மோசமான ஃபார்முக்கு சென்றார். இதனையடுத்து கோப்பையை வென்றுக் கொடுத்த கையுடன், ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சீசனிலும் அவர் விளையாடுவார் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்தது.

அதிர்ச்சி அறிவிப்பு

அதிர்ச்சி அறிவிப்பு

இதனையடுத்து ரசிகர்கள் நிம்மதியாக இருந்த நிலையில் தற்போது அதிர்ச்சி தரும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை அணியின் கேப்டன்சி பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் தோனி ஒப்படைத்துள்ளார். அதுவும் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்தே ஜடேஜா தான் கேப்டன்சி செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஓய்வு பெற்றுவிட்டாரா

ஓய்வு பெற்றுவிட்டாரா

எனினும் தோனியின் ஓய்வு குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. சிஎஸ்கே வீரராக தோனி விருப்பப்படும் வரை விளையாடலாம் என நிர்வாகம் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் இந்த சீசனில் ஓய்வு பெறுவார் என்பது தான் நிதர்சனமான உண்மை. ஏனென்றால் இதற்காக தான் மெகா ஏலத்தில் ஜடேஜாவை முதன்மை தேர்வாக ரூ.16 கோடிக்கு தக்கவைத்தனர்.

சென்னையில் சிறப்பு விழா

சென்னையில் சிறப்பு விழா

தோனியின் ஆசையும் நிறைவேறவுள்ளது. அதாவது நடப்பு ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனிக்காக சிறப்பு விழா ஏற்படுத்தப்படவுள்ளது. அதில் சென்னை ரசிகர்களுக்கு மத்தியில் தோனி விடைபெற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Story first published: Thursday, March 24, 2022, 15:41 [IST]
Other articles published on Mar 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+