Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2023: நடப்பு சீசனோடு தோனி ஓய்வா? யார் அப்படி சொன்னார்கள்.. ஃபிளமிங் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: நடப்பு ஐபில் தொடரோடு ஓய்வுபெறுவதாக எம்எஸ் தோனி இதுவரை எந்தவித சமிக்ஞைகளையும் வெளிப்படுத்தவில்லை என்று சென்னை அணியின் பயிற்சியாளர் ஃபிளமிங் தெரிவித்துள்ளார்.

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் சென்னை அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் உள்ளது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரு போட்டிகளில் சென்னை அணி தோல்வியடைந்துள்ளது.

MS Dhoni hasnt indicated that the IPL 2023 is the Last season for him says CSK Coach Stephen Fleming

இதனால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் பிரச்சனைகளை சந்திக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் எம்எஸ் தோனி விளையாடும் கடைசி சீசனில் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாதோ என்று ரசிகர்கள் கலங்கியுள்ளனர். தோனிக்கு 41 வயதாகினாலும், ஃபினிஷிங் ரோலில் களமிறங்கி பவுலர்களுக்கு பல்வேறு அதிர்ச்சியை கொடுத்து வருகிறார். இதனால் தோனி இன்னும் ஒரு சில சீசன்கள் விளையாடுவார் என்று பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் நடப்பு ஐபிஎல் தொடரில் 35 பந்துகளை எதிர்கொண்டு 8 சிக்சர்களை தோனி பறக்கவிட்டுள்ளார். இந்த நிலையில் சென்னை அணியின் தோல்விக்கு பின் பயிற்சியாளர் ஃபிளமிங் செய்தியாளர்களை சந்தித்த போது, தோனி இந்த சீசனோடு ஓய்வுபெறுவதாக பேச்சுகள் அடிபடுகிறது. இதுகுறித்து ஓய்வறையில் தோனி ஏதேனும் சமிக்ஞைகளை வெளிப்படுத்தினாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஒரே வார்த்தையில், எந்த சமிக்ஞைகளையும் வெளிப்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.

MS Dhoni hasnt indicated that the IPL 2023 is the Last season for him says CSK Coach Stephen Fleming

இதனால் தோனி அடுத்த சீசனிலும் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே ஒவ்வொரு போட்டியின் போதும் தோனியை பார்க்கவும், அவருக்கு கடைசியாக ஒருமுறை விடையளிக்கவும் ரசிகர்கள் மைதானங்களில் கூடி வருகின்றனர். இதனை தோனி பல்வேறு போட்டிகளில் வெளிப்படுத்தி வருகிறார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த போதும், தோனி எந்த சமிக்ஞைகளையும் வெளிப்படுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 1, 2023, 8:44 [IST]
Other articles published on May 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+