பழைய பன்னீர்செல்வமாக மாறி பந்தாடிய டோணி.. பறந்தது சிக்ஸ் மழை.. அதிரும் சோசியல் மீடியா!
சென்னை: ஐபிஎல் குவாலிபையர்-1 சுற்றில் நேற்று மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்று, பைனலுக்கு முன்னேறியது டோணி இடம் பிடித்துள்ள, ஸ்மித் தலைமையிலான, ரைசிங் புனே அணி.
இந்த போட்டியில் ஸ்மித் உட்பட தொடக்கத்தில் பல பேட்ஸ்மேன்கள் கைவிட்டபோதிலும், கடைசி கட்டத்தில் டோணி அதிரடியாக 5 சிக்சர்களை விளாசி 162 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோருக்கு வித்திட்டார்.
ரஹானே 56 ரன்களும், மனோஜ் திவாரி 58 ரன்களும் எடுத்தபோதிலும், 26 பந்துகளில் டோணி விளாசிய 40 ரன்கள் கடைசி கட்டத்தில் ஸ்கோரை மளமளவென உயர்த்த உதவியது. இந்த ஸ்கோர்தான் அணியின் வெற்றிக்கும் காரணமாக இருந்தது.
புனேக்கு எதிராக நடப்பு ஐபிஎல் தொடரில் 3வது முறையாக மும்பை தோல்வியடைந்துள்ளது. 2014ல் சிஎஸ்கே அணி மும்பையே இதேபோல மூன்று முறை ஒரே சீசனில் புரட்டி எடுத்தது. தண்ணீர் எடுத்துச் செல்வதை தவிர மற்ற அனைத்து துறைகளுக்கும் தனித் தனி பயிற்சியாளர் வைத்துள்ள, பலம் வாய்ந்த மும்பையை ஒரே சீசனின் 3 முறை புரட்டி எடுத்த சிஎஸ்கே மற்றும் புனே ஆகிய இரு அணிகளிலும் பொதுவான ஒரே வீரராக, டோணி இடம் பெற்றுள்ளார் என்பது சிறப்பு.
டோணியின் பேட்டிங்
டோணியின் பேட்டிங் பழையபடி பட்டையை கிளப்பியதை பார்த்ததும் டிவிட்டரில் ரசிகர்கள் ஆனந்த கூத்தாடினர். சமூக வலைத்தள கருத்துக்களை பாருங்கள்.
"மும்பையன்ஸ் இதான நீங்க சொன்ன பிளே ஆப், வந்தாச்சு இனி எங்க வரணும் சொல்லுங்க" என வடிவேலு காமெடியை மேற்கோள் காட்டுகிறது இந்த டிவிட். பிளேஆப்பில் மும்பை பழிவாங்கும் என அதன் ரசிகர்கள் கூறியதை கேலி செய்கிறது.
தொடர்ந்து தோல்வி
"என்ன 3 தடவைக்கு மேல அடிச்சா திரும்ப அடிக்க போற மாதிரியே எண்ற? ரோகித் :ஏன் எண்ண கூடாதா?நான் பாட்ல எண்றேன் நீ பாட்ல அடிச்சுட்டு போ". தலைநகரம் படத்தில் வடிவேலு அடிவாங்குவதை எண்ணிக்கொண்டிருப்பார். அதுபோல மும்பை தோல்வியை எண்ணிக்கொண்டுள்ளது என கேலி செய்கிறது.
அடி தொடருகிறது
RPS டூ மும்பை
அதே ஆள்
அதே அடி
அதே இடம்
ஆனா க்ரவுண்டு தான் வேற
ரன் ஓடவில்லை
"கடைசி பால்ல தலைவன் ஏன் ஓடாம நின்னாருன்னு ஹேட்டர்ஸ் கேட்கலாம். அது நோ பாலா இருந்தா பிரீ ஹிட் அடிக்கலாமுன்னுதான். பச்😒". புனே பேட்டிங்கின்போது பும்ரா வீசிய கடைசி பந்தில் டோணி ரன் ஓட முயற்சியே செய்யவில்லை. இதனால், திவாரி ரன்அவுட்டானார். அதற்கு காரணம் இதுவாகத்தான் இருக்கும் என்று 'கண்டுபிடித்துள்ளார்' இந்த நெட்டிசன்.
டோணி.. டோணி
"50 ரன் அடிச்சவன் சும்மா நிக்கான், ஸ்டேடியம்மே தோனி தோனின்னு கத்துது. Class is permanent". திவாரி 50 ரன் விளாசி மறுமுனையில் நின்றார். ஆனால் டோணி, களமிறங்கியது முதல் ரசிகர்கள் அவர் பெயரை சொல்லிதான் கோஷமிட்டபடி இருந்தனர்.
பாகுபலி மொமண்ட்
இது கொஞ்சம் ஓவராக தெரியலாம். ஆனால், பாகுபலிதானே இப்போது டிரெண்ட். எனவே சத்யராஜ்தான், பிராட்மேன். அந்த குழந்தையே... டோணிதான்.
ஸ்மித்துக்கு பயிற்சி கொடுப்பது டோணிதானாம்
பாருங்கள் ஆஸி இளவரசி, முதலில் ரோஹித் ஷர்மா நெற்றியில் மூன்று விரல், பிறகு மும்பை இண்டியன்ஸுக்கு நடுவிரல்
ஆடத்தெரியாது என்ற விமர்சனம் சரியல்ல
ஆடத்தெரியாதாம்ல முக்கிய மேட்ச்சுல எப்டி ஆடனும்னு தலைவனுக்கு தெரியும்டா சிப்சுகளா நீங்க ரோஹித்த வச்சு அப்டி ஓரமா போயி முக்குங்க


Click it and Unblock the Notifications