Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு திட்டத்தோடதான் இருக்காரு தல... மும்பையிலயும் ஜரூரா பயிற்சியை துவங்கிட்டாங்க

மும்பை : ஐபிஎல் 2021 தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளது. தொடருக்காக ரசிகர்கள் மட்டுமின்றி 8 ஐபிஎல் அணிகளும் அதன் வீரர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஐபிஎல் தொடர் அறிவிப்பிற்கு முன்னதாகவே சென்னையில் தனது பயிற்சி முகாம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு அதை செயல்படுத்தியது சிஎஸ்கே.

இந்நிலையில் தற்போது மும்பையிலும் நேற்றைய தினம் தனது பயிற்சிகளை சிஎஸ்கே வீரர்கள் துவங்கியுள்ளனர்.

சிறப்பான பயிற்சிகள்

சிறப்பான பயிற்சிகள்

ஐபிஎல் 2020 தொடர் தற்போதுதான் முடிந்தது போல உள்ளது. ஆனால் அடுத்ததாக 2021 தொடர் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது. இதற்கென 8 ஐபிஎல் அணிகளும் தயாராக உள்ளன. மேலும் அதன் வீரர்களும் சிறப்பாக தங்களது பயிற்சிகளை நடத்தி வருகின்றன.

தோனி உள்ளிட்டோர் பங்கேற்பு

தோனி உள்ளிட்டோர் பங்கேற்பு

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் துவக்கத்திற்கான தேதியை பிசிசிஐ அறிவிப்பதற்கு முன்னதாகவே சிஎஸ்கே அணி சென்னையில் தனது பயிற்சி முகாம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. சென்னையில் கடந்த சில தினங்களாக அதன் பயிற்சி போட்டிகள் நடைபெற்றன. இதில் தோனி, ருதுராஜ், அம்பத்தி ராயுடு உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று முதல் பயிற்சி

நேற்று முதல் பயிற்சி

இந்நிலையில் ஹோம் அட்வான்டேஜ் இல்லாததால் தற்போது சிஎஸ்கேவின் பயிற்சி முகாம்கள் மும்பைக்கு மாற்றப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு அணி வீரர்கள் மும்பை சென்றனர். இதையடுத்து நேற்று முதல் அணியின் பயிற்சி முகாம்கள் மும்பையில் துவங்கியுள்ளது.

குவாரன்டைனில் ஜடேஜா

குவாரன்டைனில் ஜடேஜா

இந்த முகாமில் சிஎஸ்கே கேப்டன் தோனி, ருதுராஜ், ராயுடு, புஜாரா உள்ளிட்டவர்களை பார்க்க முடிந்தது. தனது பிட்னசை நிரூபித்து அணியில் இணைந்துள்ள ரவீந்திர ஜடேஜா, 7 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட உள்ளார். இதையடுத்து அவரும் பயிற்சி முகாம்களில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Sunday, March 28, 2021, 10:20 [IST]
Other articles published on Mar 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+