Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிதான் அதுக்கு சிறப்பான உதாரணம்... உத்வேகமும் அவருதான்... ஜோஸ் பட்லர் பாராட்டியிருக்காரு!

டெல்லி : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டன் சஞ்சு சாம்சனின்கீழ் இந்த சீசனில் விளையாடவுள்ளார் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர்.

சிறந்த விக்கெட் கீப்பருமான ஜோஸ் பட்லர், எம்எஸ் தோனிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தோனி பலருக்கு சிறப்பான உதாரணமாகவும் உத்வேகமாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார் பட்லர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்

ஐபிஎல் 2021 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்துள்ளார் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். இயான் மார்கனுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், கடந்த இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரின் இறுதி இரண்டு போட்டிகளை இவர் கேப்டனாக வழிநடத்தியுள்ளார்.

அணியில் கொண்டு வருவார்

அணியில் கொண்டு வருவார்

இதுவரை 50 டெஸ்ட்கள், 148 ஒருநாள் போட்டிகள் மற்றும் 79 டி20 போட்டிகளில் இங்கிலாந்துக்காக விளையாடியுள்ள பட்லர், இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்சில் அனைத்துவிதமான திறமைகளுடன் வீரர்கள் அணிவகுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். கேப்டன் சஞ்சு சாம்சன் மிகவும் உற்சாகமான வீரர் என்றும் அதை அவர் அணியில் கொண்டு வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கேப்டன் பெறுப்பில் விருப்பமானவர்

கேப்டன் பெறுப்பில் விருப்பமானவர்

மேலும் அவர் மிகவும் பொறுமையானவர் மற்றும் உற்சாகமானவர் என்றும் தன்னுடைய கேப்டன் பதவியில் மிகுந்த விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பென் ஸ்டோக்ஸ் இந்த தொடரில் அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை அளிப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சங்ககாராவுக்கு பாராட்டு

சங்ககாராவுக்கு பாராட்டு

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக குமார சங்ககாரா உள்ளதால் அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்றும் அவர் தன்னுடைய அனுபவங்களை அணிக்காக சிறப்பாக தருவார் என்றும் பட்லர் மேலும் தெரிவித்துள்ளார்.

உத்வேகமான தோனி

உத்வேகமான தோனி

இதனிடையே கடந்த 2008ல் ஐபிஎல் துவக்கத்திலிருந்து சிஎஸ்கேவின் கேப்டனாக விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் எம்எஸ் தோனி உள்ளதை சுட்டிக் காட்டியுள்ள பட்லர், அவர் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக உள்ள மற்ற அணி வீரர்களுக்கு உத்வேகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தோனிக்கு பாராட்டு

தோனிக்கு பாராட்டு

இந்த முறை தோனியுடன் சேர்த்து விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கேஎல் ராகுல், ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சன் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் ரிஷப் பந்த் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இதை சுட்டிக் காட்டிய பட்லர், தன்னை பின்தொடர்பவர்களுக்கு சிறப்பான உதாரணமாக தோனி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, April 11, 2021, 20:06 [IST]
Other articles published on Apr 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+