Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புனே அணியின் பல்வாள்தேவன் ஸ்மித்தாக இருக்கலாம்.. பாகுபலி டோணிதான்! போட்டு உடைத்த சக வீரர்

புனே: ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் வேண்டுமானால் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் இருக்கலாம். ஆனால் அந்த படையின் உண்மையான பாகுபலி, தல டோணிதான் என்ற தகவலை வெளிப்படுத்தியுள்ளார் சக வீரர் ஒருவர்.

சிஎஸ்கே அணி கேப்டனாக சிறப்பாக செயல்பட்டவர் டோணி. சென்னை அணி 8 சீசன்களில் ஒன்றில் கூட பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனதில்லை. அப்படிப்பட்ட நிலைக்கு அணியை உயர்த்தி இருமுறை கோப்பையை வெல்லவும் அச்சாணியாக இருந்து உதவியவர் டோணி.

சென்னை அணிக்கு போதாத காலம். உரிமையாளர்கள் செய்த கோல்மால் காரணமாக கடந்த இரு வருடங்களாக அந்த அணியும், ராஜஸ்தான் அணியும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை.

டோணி மீது ரசிகர்கள் பாசம்

டோணி மீது ரசிகர்கள் பாசம்

இதனால், டோணி, புனே அணிக்காக ஆடிவருகிறார். கடந்த வருட சீசனில் கேப்டனாக செயல்பட்ட அவர், நடப்பு சீசனில் கேப்டன் பொறுப்பை துறந்தார். அந்த அணிக்கு ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும், டோணியின் பங்களிப்பால்தான் புனே அணி சிறப்பாக ஆடி வருகிறது என்பது அவரது ரசிகர்கள் கருத்து.

டோணியின் உதவி

டோணியின் உதவி

டோணி ரசிகர்கள் கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது, புனே வீரர் மனோஜ் திவாரியின் கருத்து. டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு முந்தைய ஆட்டத்திற்கு பிறகு பேசிய திவாரி, டோணி பற்றி மிகவும் புகழ்ந்துரைத்தார். அவர் கூறுகையில், மேகி (டோணி) அண்ணன், ஸ்மித்துக்கு பல வகைகளில் உதவி செய்து வருகிறார்.இதை தொலைக்காட்சி சேனல்களில் போட்டியை பார்க்கும் ரசிகர்கள் கூட நிறைய முறை பார்த்திருக்க முடியும்.

டோணி சொன்னால் கரெக்ட்

டோணி சொன்னால் கரெக்ட்

விக்கெட் கீப்பராக உள்ள டோணியால் களத்தை எளிதாக கணிக்க முடியும். ஃபீல்டர்களை எங்கே நிறுத்த வேண்டும் என்பதில் ஸ்மித்துக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட ஃபீல்டர்களுக்கும் டோணி டிப்ஸ் தருவார். அவரது வழிகாட்டுதல் படி செயல்பட்டால் பலன் கிடைப்பது நிச்சயம்.

கேப்டன் பொறுப்பு

கேப்டன் பொறுப்பு

கேப்டன் என்ற வகையில் ஸ்மித்துக்கு ஏகப்பட்ட பொறுப்புகள் உள்ளன. எனவே டோணியின் செயல்பாட்டால் ஸ்மித்தின் பாரம் குறைகிறது. டோணியின் ஆலோசனைகள் விலைமதிப்பு இல்லாதவை. அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிப்பவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அட, டோணி ஹீரோதாங்க

அட, டோணி ஹீரோதாங்க

அவ்வளவு ஏன், சாட்சாத், ஸ்மித்தே தனது வாயால், டோணி பற்றி ஒரு டிவி சேனலுக்கு இன்று அளித்த பேட்டியை பாருங்கள்: டோணியை நான் பெரிதும் மதிக்கிறேன். ஒரு வீரராகவும், தலைவராகவும் அவர் கவர்கிறார். அவருடன் ஆடிய இந்த ஐபிஎல் சீசன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது. டோணியை அனைத்து இந்திய இளம் வீரர்கள் ஆதர்ஷ நாயகனாக பார்க்கிறார்கள். இவ்வாறு ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, May 12, 2017, 16:42 [IST]
Other articles published on May 12, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+