Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தீவிர பயிற்சியில் தோனி.. ஜார்க்கண்ட் அணியுடன் இணைந்த தல.. என்ன காரணம் தெரியுமா?

ராஞ்சி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தற்போது தீவிர வலை பயிற்சியில் இறங்கியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்திருக்கிறது.

2023 ஆம் ஆண்டு ஐ பி எல் சீசன் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போட்டி நடைபெற உள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் தங்களது சொந்த மண்ணில் தோனியை காண உற்சாகமாக உள்ளனர்.

5 மாதங்களுக்கு முன்பு

5 மாதங்களுக்கு முன்பு

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், அடுத்த சீசன் தொடங்க 5 மாதங்களுக்கு முன்பு தோனி தனது பயிற்சியை தொடங்கியிருக்கிறார்.சையது முஸ்தாக் அலி கோப்பைக்காக ஜார்க்கன்ட் அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

வலைப் பயிற்சி

வலைப் பயிற்சி

இந்த நிலையில் தனது சொந்த ஊரான ராஞ்சியில் ஜார்க்கண்ட் அணியுடன் சேர்ந்துள்ள தோனி பயிற்சியை தொடங்கியிருக்கிறார். தோனி பேட்டிங் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. முதலில் லேசான பயிற்சியை தொடங்க இருக்கும் தோனி பிறகு தனது பயிற்சி வீரியத்தை அதிகரிக்க உள்ளார்.

மினி ஏலம்

மினி ஏலம்

தோனிக்கு தற்போது 40 வயதாகிறது. ஏற்கனவே காலில் மூட்டு வலி இருக்கிறது. அதற்காக சிகிச்சை எடுத்து வரும் தோனி, டென்னிஸ் பயிற்சியிலும் ஈடுபட உள்ளார். இதனிடையே, ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக பி சி சி ஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சென்னை அணி என்ன செய்யப் போகிறது என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

அடுத்தது என்ன?

ஜடஜாவை வேறு எந்த அணிக்கும் டிரான்ஸ்பர் செய்ய விரும்பவில்லை என சிஎஸ்கே திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் ஜடேஜா தனது ஒப்பந்த முடியும் வரை சிஎஸ்கே உடன் தான் இருப்பார் என கூறப்படுகிறது. மினி ஏலம் முடிந்த பிறகு சிஎஸ்கே வின் முக்கிய வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் இணைந்து தங்களது பயிற்சியை சென்னையில் தொடங்க உள்ளனர்.

Story first published: Friday, October 14, 2022, 19:43 [IST]
Other articles published on Oct 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+