Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்லுல எப்பவுமே சூப்பர்தான்... மீண்டும் நிரூபித்துள்ள 'தல'!

டெல்லி : ஐபிஎல்லில் சிஎஸ்கே கேப்டனாக செயல்பட்டு வரும் முன்னாள் கேப்டன் தோனி, அந்த அணிக்காக 3 முறை கோப்பைகளை பரிசளித்துள்ளார்.

கடந்த சீசனில் சிஎஸ்கே சிறப்பாக விளையாடாமல், ப்ளே -ஆப் சுற்றிற்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

இந்நிலையில் அதிகமான ஐபிஎல் அணிகளுக்கு எதிராக மிடில் ஆர்டரில் விளையாடி அதிக ரன்களை குவித்துள்ள வீரர் என்ற பெருமை தோனிக்கு கிடைத்துள்ளது.

சிஎஸ்கே கேப்டன் தோனி

சிஎஸ்கே கேப்டன் தோனி

ஐபிஎல்லில் சிறப்பான அணியாக சிஎஸ்கேவும் சிறப்பான கேப்டனாக தோனியும் உள்ளதை யாரும் மறுத்துவிட முடியாது. இதுவரை நடந்துள்ள 13 சீசன்களில் சிஎஸ்கே தோனி தலைமையில் 3 கோப்பைகளை வென்றுள்ளது சிஎஸ்கே. அந்த அணிக்காக அவர் சிறப்பான கேப்டன்ஷிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

சிறப்பாக அமையாத தொடர்

சிறப்பாக அமையாத தொடர்

கடந்த சீசன் அந்த அணிக்கு சிறப்பாக அமையவில்லை. ப்ளே -ஆப் சுற்றிற்கு கூட அந்த அணி தகுதி பெறாமல் 7வது இடத்தில் இருந்து தொடரிலிருந்து வெளியேறியது. சில போட்டிகளில் வெற்றி பெற்றதால் ஓரளவிற்கு சிறப்பான இடத்திலிருந்து அந்த அணி தொடரில் இருந்து வெளியேறியது. அந்த அணியின் இளம் வீரர்கள் இதற்கு கைகொடுத்தனர்.

சிறப்பான தோனி

சிறப்பான தோனி

இந்நிலையில் ஐபிஎல்லில் மிடில் ஆர்டரில் அதிகமான அணிகளுக்கு எதிராக விளையாடி அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பெருமை எம்எஸ் தோனிக்கு கிடைத்துள்ளது. இந்திய அணியில் மட்டுமின்றி ஐபிஎல்லிலும் தான் எப்போதும் சிறப்பு தான் என்பதை அவர் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

அதிக ரன்களை குவித்த தோனி

அதிக ரன்களை குவித்த தோனி

இதுவரை நடந்துள்ள சீசன்களில் மிடில் ஆர்டரில் விளையாடி ஆர்சிபிக்கு எதிராக 769 ரன்களையும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 679 ரன்களையும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 595 ரன்களையும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 557 ரன்களையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 477 ரன்களையும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக 463 ரன்களையும் தோனி குவித்துள்ளார்.

Story first published: Friday, January 29, 2021, 13:13 [IST]
Other articles published on Jan 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+