கோஹ்லியை விட அதிக நேரம் மக்களுக்கு 'தரிசனம்' தரும் டோணி
மும்பை: விளம்பர படங்களில் அதிக நேரம் காட்சி தருவதில் டெஸ்ட் கேப்டன், கோஹ்லியை பின்னுக்கு தள்ளி மீண்டும் ஒருநாள் அணி தலைவர் டோணி முதலிடம் பிடித்துள்ளார்.
ஆட்எக்ஸ் இந்தியா நிறுவனம், நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. கடந்த வரும் கோஹ்லி, டோணியை முந்திய நிலையில், தற்போது விட்ட இடத்தை பிடித்துள்ளார் கூல் கேப்டன்.

இந்த ஆய்வு முடிவின் அர்த்தம், கோஹ்லியின் விளம்பர வருமானம் டோணியை விட குறைவு என்று சொல்லுவது கிடையாது. ஏனெனில், விளம்பரத்தில் நடிக்க, கோஹ்லி நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி சம்பளம் பெறுகிறார். டோணியோ ரூ.1.5 கோடிதான் பெறுகிறார்.
பாதி தொகையில் டோணி கிடைப்பதால் பெரும்பாலான பிராண்டுகள் தங்கள் விளம்பரத்தில் டோணியை நடிக்க வைக்க முன்னுரிமை கொடுக்கின்றன. இதனால் அதிகப்படியான விளம்பரங்களில் டோணி காட்சியளிக்கிறார்.
Story first published: Wednesday, July 13, 2016, 17:50 [IST]
Other articles published on Jul 13, 2016


Click it and Unblock the Notifications