IPL -தோனி செய்த மாஸ்டர் ஸ்டோர்க்கை கவனிச்சீங்களா? தடுமாறிய குஜராத்.. செம ஐடியா
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர். டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருப்பதால் , 200 ரன்களுக்கு மேல் அடித்தால் தான் சிஎஸ்கே அணியில் வெற்றி பெற முடியும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணம், சிஎஸ்கே அணியின் வேகப்பந்து கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது. இதனை புரிந்து கொண்டு ருத்துராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார். தொடக்க வீரர் கான்வே 1 ரன்னில் ஆட்டமிழந்த உடன் சிஎஸ்கே தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தாமல், அடித்து ஆட வேண்டும் என்று முடிவு எடுத்தது.

இதன் மூலம், இந்த சீசனில் புதிய யுத்தியை சிஎஸ்கே கையில் எடுத்துள்ளது தெளிவாக தெரிகிறது. ஐபிஎல் தொடரில் முதல் முறையாக களமிறங்கிய அயர்லாந்து வீரர் என்ற பெருமையை ஜோஸ் லிட்டில் களமிறங்கினார். ஆனால் அவருடைய முதல் ஓவரிலேயே சிஎஸ்கே அணி 15 ரன்கள் எடுத்தது.
மொயின் அலி 23 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதன் பிறகு ரஷித் கான் பந்தை கடந்த காலத்தில் அபாரமாக எதிர்கொண்ட ராயுடுவை களமிறக்காமல், பென் ஸ்டோக்சை தோனி களமிறக்கினார். அதன் பிறகு ஸ்டோக்ஸ், ராயுடு ஆகியோர் ஆட்டமிழந்த உடன் தோனி களத்துக்கு வராமல் சிவம் துபேவை களத்துக்கு அனுப்பினார்.
இதற்கு களத்தில் வலது கை பேட்ஸ்மேன்களும், இடது கை பேட்ஸ்மேன்களும் இருந்தால் பந்துவீசும் அணிக்கு அது பெரிய தலைவலியை கொடுக்கும். கேப்டன்கள் ஃபில்டிங் மாற்றி கொண்டே இருக்க வேண்டும். இதே போன்று பந்துவீச்சாளர்களும் ஒரே லைனில் பந்துவீச முடியாமல் தடுமாறுவார்கள். இது தோனியின் மாஸ்டர் ஸ்டோர்காக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications