சர்வதேச அளவுல அவர் சிறப்பா இருக்காருன்னா அதுக்கு காரணம் தோனிதான்
டெல்லி : சர்வதேசஅளவில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவின் சிறப்பிற்கு காரணம் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் இடம்பெற்றாலும் பெறாவிட்டாலும் தன்னுடைய பேச்சுக்களில் ரோகித் சர்மாவை எம்எஸ் தோனி முன்னலை படுத்துவார் என்றும் கம்பீர் கூறியுள்ளார்.
தேர்வுக்குழு மற்றும் அணி நிர்வாகம் இருந்தாலும், கேப்டனின் ஆதரவு இல்லையென்றால் எந்த பலனுமில்லை என்றும் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

இந்திய துவக்க ஆட்டக்காரர்
இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக சிறப்பான சாதனைகளை தொடர்ந்து வருபவர் ரோகித் சர்மா. 224 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 9,115 ரன்களை குவித்துள்ளார். இதில் 29 சதங்களையும், 43 அரைசதங்களையும் குவித்துள்ளார். இதேபோல, டி20யில் 108 போட்டிகளில் விளையாடி 2273 ரன்களை அடித்துள்ளார். ஸ்டிரைக் ரேட்டாக 138.78 புள்ளிகளை பெற்றுள்ளார்.

தோனியே காரணம்
இந்நிலையில், சர்வதேச அளவில் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மாவின் சிறப்பிற்கு காரணம் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனிதான் என்று முன்னாள் பேட்ஸ்மேனும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் இடம்பெற்றாலும் பெறாவிட்டாலும் தன்னுடைய பேச்சுகளில் ரோகித் சர்மாவை தோனி முன்னிலைப்படுத்துவார் என்று கம்பீர் கூறியுள்ளார்.

இளம்வீரர்களுக்கு ஆதரவு கிடைக்க வேண்டும்
கடந்த 2007ல் தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா களமிறங்கினார். ஆனால் அவர் 2013ல் துவக்க வீரராக தோனியால் களமிறக்கப்பட்ட பின்பே தொடர்ந்து தன்னுடைய சாதனை பயணத்தை துவக்கி தொடர்ந்து வருகிறார். கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கு தோனி துணையிருந்து அவர்களை முன்னேற்றியதுபோல, மற்ற இளம்வீரர்களை அவர்கள் முன்னேற்ற வேண்டும் என்றும் கம்பீர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வீரரின் வெற்றிப் பயணம்
தேர்வுக்குழு மற்றும் அணி நிர்வாகம் வீரர்களின் தேர்வில் முக்கிய பங்கு வகித்தாலும், அணியின் கேப்டனின் ஆதரவு இல்லையென்றால் அதெல்லாம் பலனளிக்காது என்றும் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். எல்லா விஷயமும் கேப்டனின் கையில்தான் உள்ளது என்றும், ரோகித்திற்கு தோனியின் ஆதரவு கிடைத்ததுபோல ஒவ்வொரு வீரருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications