Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்டூல் போட்டு ஏறி நின்னுதான் அடிக்கனும்... அலுத்துக் கொள்ளும் "ஹெலிகாப்டர்" டோணி!

ராஞ்சி: டோணி என்றால் ஹெலிகாப்டர் ஷாட்தான் நினைவுக்கு வரும். முன்பெல்லாம் பட்டையைக் கிளப்பி வந்த டோணி இப்போதெலாலாம் ஹெலிகாப்டர் ஷாட்டையே அடிப்பதில்லை. இதுகுறித்து அவரிடமே கேட்டதற்கு சுவாரஸ்யமான பதிலைச் சொன்னார் டோணி.

டோணியின் ஸ்பெஷாலிட்டியே ஹெலிகாப்டர் ஷாட்தான். ஐபிஎல் போட்டிகளில் அடிக்கடி அடித்து நொறுக்கி ரசிகர்களை பரவசப்படுத்துவது டோணியின் வேலை. இப்போதெல்லாம் அப்படிப்பட்ட ஷாட்டை அடிப்பதையே அவர் மறந்து விட்டார்.

முன்பு போல ஏன் இப்போதெல்லாம் ஹெலிகாப்டர் ஷாட்டை அடிப்பதில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு தனது பாணியில் ஜாலியாக பதிலளித்துள்ளார் டோணி.

தொடர் வெற்றி பெற்றாலும்

தொடர் வெற்றி பெற்றாலும்

முதலில் ஆஸ்திரேலியாவில் 3-0 என்ற கணக்கில் டுவென்டி 20 தொடரை இந்தியா வென்றது. தற்போது இலங்கைக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. கேப்டனாக இது டோணிக்கு மகிழ்ச்சியே என்றாலும் கூட ஒரு பேட்ஸ்மேனாக அவருக்கு நெருக்கடி இன்னும் விலகவில்லை.

கீப்பிங் கூட ஓகேதான்

கீப்பிங் கூட ஓகேதான்

கேப்டனாக மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பராகவும் சிறப்பாகவே செயல்படுகிறார் டோணி. ஆனால் பேட்ஸ்மேனாக அவரது அதிரடி பார்ம் இப்போது மிஸ்ஸிங். அதுதான் கவலை அளிப்பதாக உள்ளது.

எங்கே எங்கள் டோணி!

எங்கே எங்கள் டோணி!

இலங்கைக்கு எதிரான 3வது டுவென்டி 20 போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது செய்தியாளர்கள் கேட்ட கேள்வி எங்கே எங்களது அதிரடி டோணி, எங்கே உங்களது ஹெலிகாப்டர் ஷாட் என்பதுதான்.

கடலுக்குக் கீழே இருந்து எப்படி அடிப்பது!

கடலுக்குக் கீழே இருந்து எப்படி அடிப்பது!

இதுகுறித்து டோணி ஜாலியாக கூறுகையில், கடலுக்கு கீழோ அல்லது நீர்மூழ்கிக் கப்பலுக்கு உள்ளேயே இருந்து கொண்டு எப்படி பறக்க முடியும். அதேபோலத்தான் பவுன்சர் பந்தில் என்னால் ஹெலிகாப்டர் ஷாட் அடிக்க முடியாது.

ஸ்டூல் போட்டு வேணும்னா அடிக்கலாம்

ஸ்டூல் போட்டு வேணும்னா அடிக்கலாம்

வேண்டும் என்றால் ஒரு ஸ்டூல் போட்டு ஏறி நின்று கொண்டு வேண்டுமானால் அடிக்க முயற்சிக்கலாம். இப்போது உள்ள பவுலர்களிடம் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பது கஷ்டம்.

சிக்ஸ் அடிக்காட்டி என்ன பாஸ்!

சிக்ஸ் அடிக்காட்டி என்ன பாஸ்!

சிக்ஸர்கள் அடிக்காவிட்டால் உடனே ஓய்வு பெற்று விட வேண்டும் என்று யாரும் கூறக் கூடாது. சிக்ஸர் அடிக்காவிட்டால் ஓய்வு பெற்று விட வேண்டுமா.

பிட்டாதான் இருக்கேன்

பிட்டாதான் இருக்கேன்

நான் இன்னும் பிட்டாகத்தான் இருக்கிறேன். எனது வேலையை சரியாகவும் செய்கிறேன். என்னை ஓய்வு பெறச் சொல்ல முடியாது. சிலருக்கு நான் ஓய்வு பெற வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால் நான் சரியாக விளையாடுவதாக கருதுவதால் அதைப் பற்றி நான் யோசிக்க முடியாது என்றார் அவர்.

ஆசியா கோப்பை

ஆசியா கோப்பை

அடுத்து வங்கதேசத்தில் பிப்ரவரி 24ம் தேதி ஆசியா கோப்பைப் போட்டித் தொடர் தொடங்குகிறது. இதையடுத்து மார்ச் 8 முதல் ஏப்ரல் 3 வரை இந்தியாவில் உலகக் கோப்பை டுவென்டி 20 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆசியா கோப்பைப் போட்டிகளும் டுவென்டி 20 போட்டிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, February 15, 2016, 16:56 [IST]
Other articles published on Feb 15, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+