For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனிக்கு வாய்ப்பு கிடைக்குமா? ரிஷப் பண்ட்டால் வந்த புதிய தலைவலி

Recommended Video

தோனிக்கு வாய்ப்பு கிடைக்குமா?.. ரிஷப் பண்ட் அணியில் சேர்ப்பு?- வீடியோ

மும்பை : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தோனி கழற்றிவிடப்படுவார் என செய்தி வலம் வருகிறது.

தோனியின் சமீபத்திய பேட்டிங் பார்ம் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. எனினும், தோனியின் அனுபவம், விக்கெட் கீப்பிங் ஆகியவை இந்திய அணிக்கு பெருமளவில் உதவி வருகிறது.

தற்போது ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். எனினும், விக்கெட் கீப்பிங்கில் அனுபவம் போதவில்லை. வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் இடம்பெறப் போகும் விக்கெட் கீப்பர் யார்? தோனியா? ரிஷப் பண்ட்டா?

தோனியின் பிரச்சனை?

தோனியின் பிரச்சனை?

தோனி இந்த ஆண்டு முழுவதும் பேட்டிங்கில் மிக சுமாராக செயல்பட்டு வருகிறார். தோனி அதிரடியாக ஆடி, இடையே கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்கிறார் என்றால் கூட விமர்சனங்கள் கடுமையாக இருக்காது. அவர் பந்தை அடிக்கவே சிரமப்படுகிறார் என்பது தான் இங்கே பிரச்சனை. இங்கிலாந்து ஒருநாள் தொடர், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் என இரண்டு தொடரிலும் பல வாய்ப்புகளை பெற்ற தோனி தன்னை பேட்டிங்கில் நிரூபிக்க தவறிவிட்டார்.

ரிஷப் பண்ட் கீப்பிங் தடுமாற்றம்

ரிஷப் பண்ட் கீப்பிங் தடுமாற்றம்

ரிஷப் பண்ட் நல்ல அதிரடி பேட்ஸ்மேன். ஆனால், விக்கெட் கீப்பிங் என்பது அதிக நுணுக்கங்கள் கொண்ட வேலை. அதற்கென தனி திறன்கள் தேவை. அங்கே தான் ரிஷப் பண்ட் சறுக்குகிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டிலும் கேட்ச்களை கோட்டை விட்டார் ரிஷப்.

இருவரில் யார் சிறந்தவர்?

இருவரில் யார் சிறந்தவர்?

தோனி பேட்டிங்கில் சொதப்புகிறார். ஆனால், கீப்பிங்கில் அதே மின்னல் வேகம் தொடர்கிறது. பந்துவீச்சாளர்களுக்கு அறிவுரை கூறி அவர்களது திறன்களை வெளிக் கொண்டு வருவதிலும் சிறப்பாக செயல்படுகிறார் அனுபவ தோனி. ரிஷப் பண்ட், ஒருவேளை ஒன்றிரண்டு ஆண்டுகளில் நல்ல கீப்பர் என பெயரெடுக்க முடியும். ஆனால், அதுவரை அவரால் ஏற்படும் இழப்புகளை இந்திய அணி ஏற்றுக் கொள்ளுமா? என்பது தெரியவில்லை.

தேர்வுக் குழு குழப்பம்

தேர்வுக் குழு குழப்பம்

தற்போது உள்ள கிரிக்கெட் அணி தேர்வுக் குழுவானது அத்தனை சிறப்பாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இவர்கள் கேப்டன் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோரின் பேச்சை கேட்டு நடப்பதாகவும் ஒரு வதந்தி உள்ளது. எனவே, இந்த சமயத்தில் தோனியின் நீக்கம் என்பது நிச்சயம் சர்ச்சைக்குள்ளாகும். தோனியை விக்கெட் கீப்பராக சேர்த்து, ரிஷப் பண்ட்டை பேட்ஸ்மேனாக சேர்க்கவும் வாய்ப்பு உள்ளது.

Story first published: Friday, April 17, 2020, 21:31 [IST]
Other articles published on Apr 17, 2020
English summary
MS Dhoni or Rishab Pant - Who will get the chance in West Indies ODI series? Will Rishab Pant get a chance in WI ODI series?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X